Tomato Sale in Ration Shop: மக்களே ஒரு குட் நியூஸ்.. இனி 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. உடனே போங்க அள்ளிட்டு வாங்க..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
![Tomato Sale in Ration Shop: மக்களே ஒரு குட் நியூஸ்.. இனி 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. உடனே போங்க அள்ளிட்டு வாங்க.. According to cm Stalin's orders, tomatoes are being sold in 300 ration shops across Tamil Nadu from today. Tomato Sale in Ration Shop: மக்களே ஒரு குட் நியூஸ்.. இனி 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை.. உடனே போங்க அள்ளிட்டு வாங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/f9e03b2819f40cea058ca47e79af10c81689129073070589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. இதனால் மக்கள் செய்வது அறியாது திகைத்து போய்யுள்ளனர். சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த சந்தைக்கான தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து, தக்காளி மொத்த விலை கிலோ 110 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் சில்லறை விலையானது ஏற்கனவே ரூ.150 ஐ கடந்து விற்பனயாகி வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, அமைச்சர் பெரியகருப்பன் தலைமை செயலகத்தில் துறைசார் அதிகாரிகள் உடன் ஜூலை 3 ஆம் தேதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன் “அகில இந்திய அளவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. எனவே, அந்த விலையை கட்டுபடுத்த பண்ணைப் பசுமைக் கடைகளை போல ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னயில் 25 ரேஷன் கடைகள், தென்சென்னையில் 35 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 22 என பிரித்து சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் மொத்தமாக 111 கடைகளில் குறைந்தது 50 முதல் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும்’ என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே சென்னையில் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மக்களின் நலன் கருதி இன்று முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 140 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியை போலவே சின்ன வெங்காயமும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ், காராமணி, பட்டாணி, இஞ்சி, பூண்டு, கேரட் ஆகிய காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)