TN Weather Update: சதத்தை நெருங்கும் வெப்பநிலை.. பொளந்துக்கட்டும் வெயில்.. வானிலை அப்டேட் இதோ..
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 37.9°C அதிகபட்சமாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04.04.2023 மற்றும் 05.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வேடசந்தூர் (திண்டுக்கல்), பாலக்கோடு (தருமபுரி), புகையிலை ஆராய்ச்சி மையம், வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 12, காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 10, பாப்பாரப்பட்டி Agro (தருமபுரி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி) தலா 9, மாயனூர் (கரூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 6, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி) 5, நட்ராம்பள்ளி (திருப்பத்தூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 4, கிருஷ்ணராயபுரம் (கரூர்), மாரண்டஹள்ளி (தருமபுரி), அவலூர்பேட்டை (விழுப்புரம்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), கீழ்பாடி (கள்ளக்குறிச்சி), மாஞ்சோலை (திருநெல்வேலி), மேல் அணை (திருப்பூர்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் மாதம் சராசரி அதிகபட்ச வெப்ப நிலை ஈரோட்டில் (37.9°C) அதிகபட்சமாக பதிவானது. தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலும் இயல்பு முதல் இயல்பை விட சற்று குறைவாகவும் பதிவானது என இந்திய வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை மார்ச் மாதத்தில் 33.5% டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் பெய்த கோடை மழையின் அளவு வழக்கத்தை விட 82% அதிகமாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.