'ABP நாடு' நடத்தும் ’நாடோடு பேசு’: பிரம்மாண்ட அரசியல் விவாத நிகழ்ச்சி - நேரம், இடம்...! முழு விவரம்!
'ABP நாடு' நடத்தும் ’நாடோடு பேசு’ பிரம்மாண்ட அரசியல் விவாத நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் கிளாரியனில் நடைபெறுகிறது
திமுக அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், தமிழ் டிஜிட்டல் ஊடக வரலாற்றில் முதன் முறையாக 'ABP நாடு' நடத்தும் ’நாடோடு பேசு’ பிரம்மாண்ட அரசியல் விவாத நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ஹோட்டல் கிளாரியனில் நடைபெறுகிறது. ’ஓராண்டை நிறைவு செய்துள்ள திமுக அரசு’ மக்கள் நினைப்பது என்ன? என்ற தலைப்பில் நடைபெறும் விவாதத்தை பேச்சாளர் ராஜ்மோகன் நெறியாள்கை செய்கிறார்.
தமிழ் டிஜிட்டல் ஊடக வரலாற்றில் முதன் முறையாக 'ABP நாடு' நடத்தும் பிரம்மாண்ட அரசியல் விவாத நிகழ்ச்சி
— ABP Nadu (@abpnadu) May 18, 2022
உங்கள் அபிமான அரசியல் ஆளுமைகளுடன் #நாடோடுபேசு நிகழ்ச்சி நாளை (19-05-2022) சென்னையில் நடைபெறுகிறது !#நாடோடுபேசு #NadoduPeasu #ABPNadu #TamilNadu pic.twitter.com/Vy58bRBruq
திமுகவின் சாதனைகளை ஆதரித்து பேச திமுகவின் முனைவர் சபாபதி மோகன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, காங்கிரஸ் கட்சி சார்பில் லக்ஷ்மி ராமச்சந்திரன் ஆகியோர் பேசுகின்றனர். திமுக அரசின் வேதனைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், பாரதிய ஜனதா கட்சியின் அமர்பிரசாத் ரெட்டி, மூத்த பத்திரிக்கையாளர் துக்ளக் ரமேஷ் ஆகியோர் பேசுகின்றனர்.