Minister K.N. Nehru: நெல்லை மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய கவுன்சிலர்கள்! - அமைச்சர் கே.என். நேரு விளக்கம்
நெல்லை மாநகர் மேயர் மாற்றம் குறித்த விவகாரத்துக்கு அமைச்சர் கே.என். நேரு பேசித் தீர்ப்போம் என கூறியுள்ளார்.
நெல்லை மாநகர் மேயர் மாற்றம் குறித்த விவகாரத்துக்கு அமைச்சர் கே.என். நேரு பேசித் தீர்ப்போம் என கூறியுள்ளார்.
நெல்லை மாநகர் மேயராக சரவணன் உள்ளார். மொத்தம் 55 வார்டுகளைக் கொண்ட நெல்லை மாநகரில் 51 வார்டு உறுப்பினர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதில் 30க்கும் அதிகமானோர், திமுக மேயராக உள்ள சரவணனை மாற்ற வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அமைச்சர் கே. என். நேருவிடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, சிறு சிறு பிரச்சனைகள் உள்ளது. அது பேசித் தீர்க்கப்படும் என கூறியுள்ளார்.
நெல்லை மாநரின் 14வது வார்டு திமுக உறுப்பினர் சரவணன் மேயராக நியமிக்கப்பட்டார். இவருக்கும் பாளையங்கோட்டை எம்.எல்.ஏ அப்துல் வஹாப்பிற்கும் கடந்த ஐந்து மாதங்களாக டெண்டர் விடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை இருவரும் பொது வெளியில் கூறாமல் மறுத்து வந்தனர். ஆனால் அப்துல்லாவின் ஆதரவாளர்களான மாமன்ற உறுப்பினர்கள் சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதன் பின்னர், மாமன்ற உறுப்பினர்களில் 30க்கும் மேற்பட்டோட் சரவணனை மாற்ற வேண்டும் என அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். மேலும், 24 உறுப்பினர்கள் அமிச்சர் நேருவைச் சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளனர். 8 பேர் சென்னை வந்துள்ளனர்.
இவர்களுக்குள் நிகழும் இந்த பிரச்சனையால், மக்கள் நலத்திட்டப் பணிகள் சீராக நடைபெறாமல் தொய்வடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, அமைச்சர் கே. என். நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ” சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்படும். மேலும், தீர்வு கண்டு தன் ஆகவேண்டும், தி.மு.க மேயர் அல்லவா” என கூறியுள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர 35 திமுக கவுன்சிலர்கள் முடிவு செய்து அதற்குரிய கடிதத்தை அமைச்சர் கே என் நேருவிடம் திருச்சி தாயானூரில் உள்ள கேர் கல்லூரி வளாகத்தில் சந்தித்து வழங்கினர்.
மேயர் சரவணன் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்றும் கவுன்சிலர்களுக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் தொகையை கொடுக்க மறுப்பதாகவும் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர் - கடிதத்தை பெற்றுக் கொண்ட தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இதுகுறித்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வழிவகை செய்வதாக உறுதி கூறினார்.