சைவ ஓட்டல் சாப்பாட்டில் எலி தலை; வாடிக்கையாளர் அதிர்ச்சி- ஆரணியில் தொடரும் அவலம்
ஏற்கனவே அசைவ ஓட்டலில் உணவு அருந்திய சிறுமி பள்ளி மாணவன் இறப்பு சம்பவம் தொடர்ந்து சை ஓட்டலிலும் அரங்கேறும் நிகழ்வால் ஆரணியில் வாடிக்கையாளர் பீதியடைந்துள்ளனர்..
ஆரணி சைவ ஓட்டலில் பார்சல் சாப்பாட்டில் பொரியலில் எலி தலை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே அசைவ ஓட்டலில் உணவு அருந்திய சிறுமி, பள்ளி மாணவர் இறப்பு சம்பவம் தொடர்ந்து சைவ ஓட்டலிலும் அரங்கேறும் நிகழ்வால் ஆரணியில் வாடிக்கையாளர் பீதியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பட்டுக்கும் அரிசிக்கும் புகழ்பெற்ற ஊராக விளங்குகிறது. ஆனால் தற்போது அசைவ ஓட்டலில் உணவு சாப்பிட்டால் உயிர் பலி வாங்கும் சம்பவத்திற்கும் பெயரெடுத்து வரும் சூழ்நிலை உருவாகி வருகின்றன. கடந்த ஆண்டும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 7-ஸ்டார் ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் உடல் உபாதைகள் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் லோசினி (11) என்ற பள்ளி மாணவி சிகிச்சை பலினின்றி மருத்துவமனையில் உயிரழந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து 7ஸ்டார் என்ற அசைவ ஒட்டலை உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்தனர். ஆனால் இச்சம்பவம் தமிழக முழுவதும் பொதுமக்களின் மத்தியில் அதிர்ச்சியை வலையில் ஆழ்த்தியது.
இதனையொடுத்து கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த திருமுருகன் (17) என்ற 12ம் வகுப்பு பள்ளி மாணவன் தேர்வு முடித்து சக நண்பர்களுடன் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள 5- ஸ்டார் எலைட் என்ற அசைவ ஒட்டலில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு உடல் உபாதைகளால் அவதிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் கடந்த 29.05.22 அன்று சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவன் திருமுருகன் பலியானார்
இச்சம்பவம் ஆரணி மட்டுமின்றி தமிழக முழுவதும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர் கதையாக கடந்த மாதம் 01.07.22 அன்று ஆரணி மணிகூண்டு அருகில் இயங்கி வரும் 5 ஸ்டார் அசைவ ஒட்டலில் ஆரணி அருகே நேத்தபாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி தம்பதியினர் சாப்பிட்ட அசைவ உணவில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் அளிக்கபட்டன.
இதன் தொடர் கதையாக கடந்த மாதம் 17ந் தேதி பழைய பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வரும் மதுரை பாண்டியன் என்ற அசைவ ஓட்டலில் ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவர் அசைவ உணவு அருந்தி கொண்டிருக்கும் போது காடைகறியில் புழு உள்ளதாக என கூறி ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து போன் மூலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் காடைகறியை சென்னை ஆய்வறிக்கைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று ஆரணி டவன் காந்தி நகர் பகுதியை சேர்ந்த முரளி என்பவர் பழைய பேருந்து நிலையம் அருகில் பாலாஜி பவன் என்ற ஓட்டலில் 35 சாப்பாட்டு பார்சலமாக வாங்கியதாக தெரிகின்றன. இதில் பீட்ரோட் பொரியலில் எலி தலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ஒட்டல் ஊழியரிடம் சுமார் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்த வந்த ஆரணி டவுன் போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதில் 2 உணவு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சி எலி தலை உள்ளதாக கூறும் உணவுகளை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆரணி பகுதியில் அசைவ ஓட்டல் தொடர்ந்து சைவ ஒட்டலிலும் தொடரும் அவலம் தூங்கி வழியும் உணவு பாதுகாப்பு துறை விழித்து கொள்ளுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளன.