மேலும் அறிய

NRI App: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி சிரமமின்றி புகார்களை பதிவு செய்யலாம்.. தமிழ்நாடு போலீஸாரின் புதிய முயற்சி..

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களின் புகார்களை பதிவு செய்ய, தமிழ்நாடு காவல் துறை தரப்பில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) நீண்டகால கோரிக்கையை நிவர்த்தி செய்து, புகார்களை பதிவு செய்யவும், அதன் நிலையை கட்டம் கட்டமாக கண்காணிக்க உதவும் செயலியை (ஆப்) தமிழ்நாடு போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருந்து என்ஆர்ஐ பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் தனி என்ஆர்ஐ பிரிவு அமைக்கப்படும் என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த முறைப்படி ஏப்ரல் 2022 இல் தொடங்கப்பட்டு ஜூலை 2022 முதல் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. என்.ஆர். ஐ பிரிவு, பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து நேரடியாக தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் தரப்பில் மனுக்களை பெற்று வந்தது. முன்னதாக, என்.ஆர்.ஐ.க்கள் தங்கள் புகார்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவது வழக்கம். இப்போது, இதனை எந்த சிரமமும் இல்லாமல் புகார்களை பதிவு செய்ய, காவல்துறை ஒரு பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், என்.ஆர்.ஐ டெஸ்க்டாப் செயலியில், மனுதாரர் தனது குறைகளை பதிவு செய்தவுடன், அவர்களுக்கென ஒரு பிரத்யேக ஐடி உருவாக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மனுவைப் பெற்ற பிறகு, மேல் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நகரம் அல்லது மாவட்டத்திற்கு அனுப்பப்படும் முன், என்.ஆர்.ஐ பிரிவு அதைச் சரிபார்க்கும் என கூறப்பட்டுள்ளது.  ” மாவட்டத்தில் உள்ள என்ஆர்ஐ பிரிவுக்கான நோடல் அதிகாரி, மனுவை சம்பந்தப்பட்ட துணைப் பிரிவுக்கு விசாரணைக்காக ஒதுக்குவார். விசாரணை அறிக்கை மற்றும் துணை ஆவணங்கள் அறிக்கையின் பக்கச்சார்பான தன்மையைக் கண்டறிய என்.ஆர்.ஐ பிரிவு அதிகாரிகளால் ஆராயப்படும். விசாரணை அறிக்கை தகுதியான அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, மனுதாரருக்கு என்ஆர்ஐ களத்தில் இருந்து விவரங்கள் அனுப்பப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் மனுதாரர் பதிவு செய்த மின்னஞ்சல் மூலமாகவும், அவர்களின் தனிப்பட்ட அடையாளத்துடன் செயலியில் உள்நுழைவதன் மூலமாகவும் அவர்களின் புகாரின் நிலை குறித்த அறிவிப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மனுதாரர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தலாம் https://www.nricell.tn.gov.in/ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், என்.ஆர்.ஐ பிரிவு கட்டுப்பாட்டு எண்ணான 044-28470025-க்கு அழைத்து சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வெளிநாடு வாழ் இந்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

Samudrayaan Mission: சந்திரயானை விடுங்க, சமுத்ரயான் தெரியுமா? ரூ.5000 கோடி செலவு, ஆழ்கடலில் 20 ஆயிரம் அடி பயணம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
Accident: சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்! ரோட்டில் கொட்டிக் கிடந்த 7 கோடி - ஆந்திராவில் பரபரப்பு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
வெற்றி மாறன், பா.ரஞ்சித்தே தமிழ் சினிமா தளர்ச்சிக்கு காரணம் - பிரசாந்த் பட இயக்குனர் குற்றச்சாட்டு
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
James Anderson: லார்ட்ஸ் டெஸ்டுடன் விடை பெறுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்! ரசிகர்கள் பெரும் சோகம்!
James Anderson: லார்ட்ஸ் டெஸ்டுடன் விடை பெறுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்! ரசிகர்கள் பெரும் சோகம்!
Fact Check: இந்து கடவுளை அவமதித்தார்களா காங்கிரஸ் தொண்டர்கள்? பா.ஜ.க.வினர் வைரலாக்கும் வீடியோ உண்மையானதா?
இந்து கடவுளை அவமதித்தார்களா காங்கிரஸ் தொண்டர்கள்? பா.ஜ.க.வினர் வைரலாக்கும் வீடியோ உண்மையானதா?
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Embed widget