Kilambakkam Bus: இனி குழப்பம் வேண்டாம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் நடைமேடை விவரம் வெளியீடு..
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த நடைமேடையில் இருந்து எந்த பேருந்துகள் புறப்படும் என்பது தொடர்பாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தென் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து விரைவு பேருந்துகள் உள்பட அரசு பஸ்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டுச்செல்ல தொடங்கின. இந்த சூழ்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் பயணம் செய்ய விரும்பும் மக்களுக்காக நடைமேடை குறித்து வழிக்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
Passengers guide to platform/ bus bays arrangements - TNSTC/ SETC buses. Check out our guide for a hassle free journey!#kcbt #cmda #publictransport #travel #chennai #development @official_kcbt @mkstalin @CMOTamilnadu @PKSekarbabu @anshulmishra555 @CumtaOfficial @TNDIPRNEWS… pic.twitter.com/TZTzegXMsY
— CMDA Chennai (@CMDA_Official) January 30, 2024
நடைமேடை குறித்த விவரம்:
நடைமேடை 1:
செங்கோட்டை, திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
நடைமேடை 2:
உடன்குடி, கருங்கல், கன்னியாகுமரி, குலசேகரம், செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம், நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கபடும்
நடைமேடை 3:
ராமேஸ்வரம், ஏர்வாடி, தொண்டி, கமுதி, காரைக்குடி, சாயல்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரச்சோழன் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
நடைமேடை 4:
கம்பம், கரூர், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, போடிநாயகன்னூர், மன்னார்குடி, பொள்ளச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
நடைமேடை 5:
நன்னிலம், நாகை, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, அரியலூர், ஒரத்தநாடு, கும்ககோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், துறையூர், வேளாங்கண்ணி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்
நடைமேடை 6:
திருப்பூர், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு, ஊட்டி, கரூர், குருவாயூர், கோவை, சேலம், எர்ணாகுளம், ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
நடைமேடை 7:
செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, மேல்மலையனூர், போளூர், வந்தவாசி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
நடைமேடை 8:
திண்டிவனம், திருக்கோவிலூர், விழுப்புரம், ஜெயங்கொண்டம், அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
நடைமேடை 9:
நெய்வேலி, விருத்தாசலம், கடலூர், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், திட்டக்குடி, புதுச்சேரி, வடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.