மேலும் அறிய
Advertisement
Power Supply: வி.வி.ஐ.பி.க்கள் வரும்போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழ்நாடு அரசு..!
வி.வி.ஐ.பி. வருகை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய அரசு நிகழ்ச்சிகளின் போது தடையின்றி மின்சாரம் வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வி.வி.ஐ.பி. வருகை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய அரசு நிகழ்ச்சிகளின் போது தடையின்றி மின்சாரம் வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது, பிரதான அரசு நிகழ்வுகளின் போது ஆய்வு செய்து மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது விமான நிலையத்திற்கு வெளியே இருக்கும் ஜி.எஸ்.டி சாலையில் மின் தடை ஏற்பட்ட நிலையில் இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின்சாரம் வழங்க, கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன..
- வரக்கூடிய விவிஐபியில் நிகழ்ச்சி நிரல் அட்டவணை சம்மந்தப்பட்ட அதிகாரிகளாக முன்கூட்டியே பெறப்பட வேண்டும். நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் TANGEDCO அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விழா நடைபெறும் இடத்திற்கு வழங்கப்படும் முக்கிய மற்றும் மாற்று மின் விநியோகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- சம்பந்தப்பட்ட SES/செயல்பாட்டினால் உறுதி செய்யப்படும்.
- சம்பந்தப்பட்ட CE/SO க்கள் நிகழ்ச்சி நிரல் குறித்து முன்கூட்டியே அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
- மற்ற மாநிலங்கள்/நாட்டிலிருந்து வரக்கூடிய விவிஐபிகள் வருகையின் போது ஆபரேஷன் மற்றும் பி&சி அதிகாரிகள் தங்கள் குழுவுடன் துணை மின் நிலையங்களில் இருக்க வேண்டும்
- SF6 மற்றும் சிறப்பு குழு, அவசர காலத்தில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும்.
- அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க சிறப்பு அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மின் நிலையங்களில் இருக்கும் தலைமை பொறியாளர்கள் விவிஐபி நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்
- தடையில்லா மின்சாரம் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
- ஓவர்லோடிங் பிரச்சனை இருந்தால் அதனை கண்காணித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- மின் துறை செயல் பொறியாளர்கள் தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்யும்.
- அந்தந்த அதிகாரிகள் மின் விநியோக பிரிவுடன் தொடர்பில் இருக்க வேண்டும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion