மேலும் அறிய

வேலூர்: போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவர்.. 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு..

ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் மீது SC/ST ACT, 420 உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் கைதாக வாய்ப்பு எனக் கூறப்படுகிறது.

வேலூர்: போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்ற தலைவர்.. 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு..

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2021-ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா சுரேஷ் என்ற பெண் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக உள்ளார். 

இத்தோளப்பள்ளி ஊராட்சி இம்முறை ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு (ஆண்,பெண்) ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா சுரேஷ் என்பவர் மாற்று சமுகத்தை சேர்ந்தவர் என்றும் தேர்தல் வேட்புமனுவில் போலியான சாதி சான்றிதழை கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாகவும் தோளப்பள்ளி ஊராட்சியில் அதே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார்.

மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா சுரேஷ் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரது செக் பவர் ரத்து செய்யப்பட்டு, விழிக்கண் குழு அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் புகார்தாரர் பாக்யராஜ் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலி சான்றிதழ் அளித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கல்பனா சுரேஷ் மீது 420,SC/ST ACT உட்பட 465, 466, 468, 471 என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற கல்பனா சுரேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..

TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?

சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை

24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது

Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Embed widget