மேலும் அறிய

ஊரடங்கை நீட்டிக்க விருப்பம் தெரிவித்தவர்கள் 84% பேர் - Local Circle ஆய்வில் தகவல்

84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளதாக லோக்கல் சர்க்கிள் அமைப்பு எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வரும் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசதிய பொருட்களான காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் இயங்கி வருகிறது. இந்த சூழலில், லோக்கல் சர்க்ள் எனப்படும் அமைப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் ஊரடங்கை தொடர வேண்டுமா?அல்லது  ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா? என்று மக்களிடம் கருத்து கணிப்பு கேட்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் மக்களிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டுள்ளது. 62 சதவீத ஆண்களிடமும், 38 சதவீத பெண்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வரும் நிலையில், 54 சதவீத மக்கள் தமிழக அரசு ஊரடங்கை வரும் மே மாதம் 31-ஆம் தேதி வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடனே நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்கள் அனைத்து தமிழக அரசு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களை இயங்க அனுமதித்து, வீட்டிற்கே பொருட்களை வந்து கொடுத்து செல்லும் முறையுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி  வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 11 சதவீத மக்கள் மட்டும் தமிழக அரசு ஊரடங்கை மே 15-ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை வழக்கம்போல இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 5 சதவீத மக்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆய்வின் இறுதியில், தமிழகத்தில் 84 சதவீத மக்கள் ஊரடங்கை வரும் மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மின்னணு வணிக நிறுவனங்களையும், ஹோம் டெலிவரி செய்யும் பலசரக்கு கடைகளையும் நாள் முழுவதும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின்போது மக்கள் ஊரடங்கு காரணமாக மிகவும் அவதிப்பட்டனர்.அப்போது, வீட்டிற்கே வந்து பொருட்களை அளிக்கும் ஹோம் டெலிவரி முறை மிகவும் உதவிகரமாக இருந்தது. இதனால், தற்போதைய இரண்டாம் அலையிலும் பெரும்பாலான குடும்பங்கள் அருகில் இருக்கும் மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு தொலைபேசி மூலமாக தங்களுக்கு தேவையான பொருட்களை கூறி, அதனை ஹோம் டெலிவரி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

இவர்களில் 48 சதவீத மக்கள் பலசரக்கு மற்றும் மருந்துகளை ஹோம் டெலிவரி மூலம் பெறுகின்றனர். 26 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி மூலம் அனைத்து பொருட்களையும் பெறுகிறோம் என்று கூறியுள்ளனர். 10 சதவீத மக்கள் எதுவும் கூறவில்லை. மொத்தமாக 74 சதவீத மக்கள் ஹோம் டெலிவரி முறை இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் ஹோம் டெலிவரியால் பயனடைந்ததாக கூறியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE :  விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
TN Lok Sabha Election LIVE : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Anbumani Daughter : ”நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க போறோம்” அன்புமணி மகள் மகிழ்ச்சிLok Sabha Elections 2024  : பரந்தூர் விவகாரம் தேர்தலை புறக்கணித்த மக்கள்..வெறிச்சோடிய வாக்கு மையம்OPS slams EPS : ”அதிமுக என்கிட்ட வந்துரும்! அ.மலை சரியா சொன்னாரு” OPS அதிரடிAnbil Mahesh casts Vote : ’’பொறுப்பா வரனும்னாலும் பொறுப்புக்கு வரனும்னாலும்..’’பஞ்ச் பேசிய அன்பில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE :  விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
TN Lok Sabha Election LIVE : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு; மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குப்பதிவு!
Kushboo:
Kushboo: "Vote4INDIA" இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்டாரா நடிகை குஷ்பு? பேரதிர்ச்சியில் பா.ஜ.க.!
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Manipur Firing: வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
வாக்குச்சாவடியில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள்.. மணிப்பூரில் தொடர் பதற்றம்!
Tamil Nadu Election 2024: இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
Embed widget