மேலும் அறிய
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விடுதியில் 58 பேருக்கு கொரோனா உறுதி
’’பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் 22 மாணவர்களும், 36 மாணவிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்’’
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது, அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனாவும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, தமிழகத்திலும் இந்த வருடம் தொடங்கியது முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கடந்த 1 ஆம் தேதி வெறும் 5 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நாட்களில் பல மடங்கு உயர்ந்து. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வரை 68 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நோய் பரவல் வேகமெடுத்து நேற்று முன் தினம் ஒரே நாளில் 162 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதனை தொடர்ந்து நேற்றும் கடலூர் மாவட்டத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது.
இந்த சூழலில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
ஆனால் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை மாணவிகள் சில விடுதிகளில் தங்கி உள்ளனர். சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை இல்லம் விடுதியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தங்கி படித்த வந்த நிலையில் நேற்று சுமார் 50க்கும் மேற்பட்ட பேருக்கு மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு உள்ளது.
கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து மருத்துவத் துறை படிப்பு சார்ந்த மாணவ, மாணவிகள் 58 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், இதில் 22 மாணவர்களும், 36 மாணவிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை அடுத்து மாணவிகள் தங்கி இருந்த தாமரை இல்லம் மூடப்பட்டது. இங்கு தங்கி இருந்த மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது , மேலும் மற்ற சில மாணவிகள் வேறு ஒரு விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தாமரை இல்லம் விடுதியின் வாயில் மூடப்பட்டது மேலும் மருத்துவ கல்லூரிக்கு வருகிற 23ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அதிகளவில் மாணவர்களுக்கு தோற்று நோய் ஏற்பட்டது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion