எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள்: நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் மரியாதை..!
அதிமுக நிறுவனர் மற்றும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாளில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதிமுக நிறுவனர் மற்றும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாளில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அதிமுகவின் நிறுவனரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் கடந்த 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இன்று அவரது 35வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, அதன் பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதேபோல், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை எம்.ஜி.ஆருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் நினைவு தினமான இன்று அவரது மனித நேயத்தையும் மக்கள் சேவையையும் போற்றி வணங்குவோம். pic.twitter.com/2anZg6SAcX
— K.Annamalai (@annamalai_k) December 24, 2022





















