மேலும் அறிய

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பொறியியலில் பட்டயப்படிப்பை தேர்வு செய்த பேரறிவாளனுக்கு அப்போது தெரியாது, அது தான், தான் செய்த பெரிய தவறு என்பதும், பின்னாளில் அதுவே தனக்கான தண்டனைக்கு காரணமாகப் போகிறது என்பதும்.

‛விடியல் காணும் காலைப்பொழுதிலாவது அனைவருக்கும் நீதி சமமாக மாறட்டும்... சட்டத்தின் மூலம் நிரபராதிகளை கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்... நீதி வெல்லட்டும்...!’ இது தான் பேரறிவாளன் தனது முறையீட்டு மடலில் எழுதியிருந்த இறுதி வார்த்தைகள். அறிவு என்கிற பேரறிவாளன்... 1991 இதே நாளான ஜூன் 11ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி, இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  விடுதலை காணாத சிறைப்பறவையாய் கூண்டுக்குள் முடங்கியிருக்கிறார் அறிவு. யார் இந்த பேரறிவாளன்? இவர் கைதானது எப்படி? மரணத்தின் கடைசி படிக்கட்டு வரை ஏறி, மீண்டது எவ்வாறு?

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

யார் இந்த பேரறிவாளன்?

சென்னை ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 மே 21ல் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுகிறார். விடுதலை புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் என்கிற அடையாளத்தோடு தொடங்கியது அந்த விசாரணை. இந்தியாவின் உயர் விசாரணை குழுவான சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு, 7 பேர் அடையாளம் காணப்படுகின்றனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் 19 பேர் குற்றவாளிகள் என தீர்மானிக்கிறது சிபிஐ. அப்போது பேரறிவாளனுக்கு 19 வயது. அதற்கு முந்தைய வருடம் வரை அறிவு, சிறுவன். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தி.க.,வைச் சேர்ந்த குயில்தாசன்-அற்புதம் தம்பதியின் இரண்டாவது மகன் தான் பேரறிவாளன். 1971 ஜூலை 30ல் பிறந்த பேரறிவாளன், இயற்கையில் நல்ல அறிவும், அமைதியும் கொண்டவர். இசை மீது தீரா பற்றுக் கொண்டவர். எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பொறியியலில் பட்டயப்படிப்பை தேர்வு செய்த அறிவுக்கு அப்போது தெரியாது, அது தான், தான் செய்த பெரிய தவறு என்பதும், பின்னாளில் அது தான் தனக்கான தண்டனைக்கு காரணமாகப் போகிறது என்பதும். ராஜீவ் கொலை விசாரணைக்கு அமைக்கப்பட்ட மல்லிகை புலனாய்வு அலுவலகத்தின் அதிகாரிகள், பேரறிவாளனை தேடி ஜோலார்பேட்டை செல்கின்றனர். அங்கு அவர் இல்லை, பெற்றோர், இருக்கும் இடத்தை தெரிவிக்க, அவர்களுடன் பெரியார் திடலுக்கு வரும் சிபிஐ அதிகாரிகள், ‛இரவு விசாரணையை முடித்து விடியலில் அனுப்பிவிடுகிறோம்...’ என, அங்கிருந்த பேரறிவாளனை அழைத்துச் செல்கின்றனர். இன்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் விடியவில்லை. பேரறிவாளன் பிரச்னையும் முடியவில்லை. ராஜீவ் கொலைக்கு காரணமான பெல்ட் குண்டை  வெடிக்க வைத்த  பேட்டரியை வாங்கியது பேரறிவாளன் என்பது தான் சிபிஐ முன் வைத்த குற்றச்சாட்டு. இன்று வரை அதை மறுக்கிறார் பேரறிவாளன்.

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

கண்ணுக்கு தெரியாத சாதகம்... விரட்டிய பாதகம்!

1998 ஜனவரி 28 வரை விசாரணை கைதியாகவே சிறைவாசம் காண்கிறார் அறிவு. அன்றைய தினம் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக கூறி , நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை விதித்தார் தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி நவநீதன். அதிர்ந்தார் பேரறிவாளன். 1998 செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. நீதிபதிகள் தாமஸ், வாத்பா, கவுத்ரி கொண்ட அமர்வு வழக்கை விசாரித்த நிலையில், 1999 மே 11ல் தடா சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது. அதன் படி பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேருக்கும் தூக்கு உறுதியாகிறது. ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. எஞ்சியுள்ள 19 பேர் விடுவிக்கப்படுகின்றனர். 2000 வது ஆண்டில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழக கவர்னருக்கு கருணை மனு அனுப்பப்பட்டு, நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது. ஆனாலும், முருகன், சாந்தன், பேரறிவாளனின் கருணை மனு நிராகரிக்கப்படுகிறது.

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

மூன்று உயிர்களை காப்பாற்றிய ஒரு உயிர்!

தமிழக கவர்னர் கைவிட, ஜனாதிபதியின் கதவுகளை தட்டியது தூக்கு தண்டனை பெற்றவர்களின் கருணை மனு. 2000ம் ஆவது ஆண்டு அனுப்பிய அந்த மனு, தொடர் பரிசீலனையில் இருந்த நிலையில், 2011 ல் ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் 11 ஆண்டுகளுக்கு பின், அந்த மனுவை நிராகரித்தார். 2011 ஆகஸ்ட் 12 அன்று பேரறிவாளனின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். 2011 செப்டம்பர் 9ல் பேரறிவாளனுக்கு தூக்கு என முடிவு செய்யப்பட்டது. அதற்கான பரிசீலனைகளும் துவங்கின. தமிழகத்தி்ல போராட்டம் வெடிக்கிறது. மூவரையும் விடுதலை செய்யக்கோரி, அடுத்தடுத்த முன்னெடுப்புகள். காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி தீக்குளிக்கிறார். பிரச்னை விஸ்வரூபம் எடுக்கிறது. 2011 ஆகஸ்ட் 30 அன்று பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம். போரட்டங்களும், அதற்காக நடந்த உயிர் தியாகமும் தான் அதற்கு காரணமானது.

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

உறுதியாக நின்ற ஜெயலலிதா

பொதுவாக பெண்கள் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரக்க குணம் கொண்டனர். பேரறிவாளனுக்காக போராடிய அவரது தாய் அற்புதத்தின் அவலநிலையை நன்கு உணர்ந்திருந்தார் அன்றைய முதல்வரான ஜெயலலிதா. தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை பிறக்கப்பட்ட அன்றைய தினமே, அமைச்சரவையை கூட்டி மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. 2014 பிப்வரி 18 ல் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மறுநாளான பிப்ரவரி 19ல் அவசரமாக அமைச்சரவையை கூட்டிய முதல்வர் ஜெயலலிதா, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதாக அறிவித்தார். அப்போது பேரறிவாளன் 23 வது ஆண்டு சிறைவாசத்தில் இருந்தார். அமைச்சரவையின் முடிவுக்கு மத்திய அரசின் கருத்து கேட்டு கடிதம் அனுப்பியது தமிழக அரசு. ஆனால், மத்திய அரசோ, தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது. 7 பேரின் விடுதலை குறித்து 3 மாதத்தில் பதிலளிக்க மத்திய அரசை அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம். அப்போது பிரமான பத்திரம் தாக்கல் செய்த சிபிஐ பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனின் பங்கு ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் வாங்கித் தந்த 9 வாட்ஸ் பேட்டரி, வெடிக்க வைக்கும் தன்மை கொண்டது என்று எடுத்து வைத்த வாதம் எடுபட,பேரறிவாளனின் விடுதலை கனவு தகர்க்கப்பட்டது. தமிழக அரசின் தீர்மானமும் தள்ளுபடி ஆனது. எப்படியாவது பேரறிவாளனை மீட்டு விடலாம் என ஏங்கிக் கொண்டிருந்த அவரது தாய் அற்புதம் மற்றும் அவரை மீட்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதாவிற்கு உச்சநீதிமன்ற உத்தரவு பின்னடைவானது.

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

வந்தா ராஜாவா தான் வருவேன்....

தனிமை சிறையில் 26 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த பேரறிவாளன், ஒரு முறை கூட பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ‛நான் என்ன தவறு செய்தேன்... செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் பரோல் கேட்க வேண்டும்... வெளியே வருவதாக இருந்தால், விடுதலையாகி தான் வருவேன்...’ என உறுதியாக இருந்தார் பேரறிவாளன். ஆனால் கடைசி வரை, அவரால் தனக்கு எதிரான குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. ஒரு புறம் தாய் படும் சிரமம் வேறு. அற்புதம் வைத்த கோரிக்கையை ஏற்று, பரோல் கேட்டு விண்ணப்பிக்கிறார் அறிவு. 2017 ஆகஸ்ட் 24ல் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பரோலுக்கு அனுமதியளித்து, 26 ஆண்டுகளுக்கு பின் தன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு வருவதற்காக வெளியுலகை பார்த்தார் பேரறிவாளன். அதன் பிறகு அடுத்தடுத்த பரோல் மட்டுமே அவருக்கு பொதுவெளிச்சத்தை காட்டியது.

ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!

கருணை கொலை கேட்ட அற்புதம்மாள்...

போராட்டம் என்கிற வார்த்தைக்கு வெற்றி என்கிற பொருள் உண்டு. அற்புதத்தின் போராட்டம் கடைசி வரை போராட்டமாகவே போனது அவருக்கு ஏமாற்றத்தை கடந்த ஏக்கமானது. ‛வெளியில் நானும்... உள்ளே அவனும் தினம் தினம் சாகிறோம்... கொஞ்சம் கொஞ்சமாய் சாவதற்கு பதில் என் மகனை கருணை கொலை செய்து விடுங்கள்...’ என அற்புதம் அளித்த பேட்டி, குற்றவாளி, குற்றமற்றவர் என்பதை கடந்து ஒரு தாயின் வலியை அப்படியே அனைவரிடத்திலும் கடத்தியது. ஒன்றல்ல இரண்டல்ல ... இன்றோடு 30 ஆண்டுகள் ஆகிறது, பேரறிவாளன் சிறை கம்பிகளை எண்ணி. இதோ விடிந்ததும் அனுப்புகிறோம் என்று கூறி அழைத்துச் சென்றவர்களுக்கு ,இன்னும் அந்த விடியல் வரவில்லை. சிகிச்சை கருதி அற்புதம் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின்,பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி கடந்த மே 19 அன்று உத்தரவிட்டார். விடுதலையை நோக்கி நகர்ந்த கோரிக்கை இன்று வரை பரோல் கோரிக்கையாகவே தொடர்கிறது. 30 ஆண்டுகள் முழுமையாய் இளமையை தொலைத்த ஒரு இளைஞன், முதுமையிலாவது இளைப்பாற இடம் கிடைக்குமா என்கிற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்! 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல்  பணிகள் தீவிரம்
கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget