மேலும் அறிய
Advertisement
IPS Transfer: 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா அதிரடி..
ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா உத்தரவிட்டுள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மை செயலர் பி. அமுதா உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி.யாக உள்ள எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக செங்கல்பட்டு மாவட்ட (பொறுப்பு) எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி. என். மோகன்ராஜ், கூடுதல் பொறுப்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.(பொறுப்பு) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் விழுப்புரம் மாவட்டம் டி.ஐ.ஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டது. குறிப்பாக
- முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக உள்ள உதய்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அறநிலையத்துறை செயலாளராக இருந்த சந்திரமோகன் பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி போக்குவரத்துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளராக இருந்த அமுதா உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பள்ளிக் கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தகுமார் மனித வள மேம்பாட்டுத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுகாதாரத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த மணிவாசம் அறநிலையத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக இருந்த கணேஷ் பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த மைதிலி கே.ராஜேந்திரன் இந்திய மருத்துவ மற்றம் ஹோமியோபதி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக இருந்த ஜெகநாதன் கூட்டுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று உள்துறை செயலாளராக பணியை தொடங்கிய அமுதா, முதல் நாளே அதிரடியாக 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion