TN Rain Alert: தமிழகத்தில் 25, 26 ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தென் கடலோர தமிழ்நாட்டின் இடங்களில் கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தென் கடலோர தமிழ்நாட்டின் இடங்களில் கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று டிசம்பர் 24 ஆம் தேதி காலை 5.30 மணி நேரத்தில் நகர்ந்து வருகிறது.
இது திருகோணமலைக்கு வடகிழக்கே 4:30 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 510 கிமீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்காக 530 கிமீ தொலைவிலும் உள்ளது மேலும், இது படிப்படியாக மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரந்து அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை பகுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
மழை எச்சரிக்கை:
டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தென் கடலோர தமிழ்நாட்டின் இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
25.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26.12.2022: தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்கள் எச்சரிக்கை:
மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதி தென் தமிழகம் பகுதிகளுக்கு டிசம்பர் 24 முதல் 26 வரை இலங்கை கடற்கரையும், 27ம் தேதி லட்சத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலின் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.