மேலும் அறிய

IAS Officers Transfer | பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை செயலாளர்கள் உள்பட 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் உள்பட தமிழகம் முழுவதும் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

“கால்நடை மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இண்ட்கோ செர்வின் முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்.பணியிடம் மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழலில் பொறுப்பு வகித்து வந்த கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்‌சேனா ஐ.ஏ.எஸ்., பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அரசு கருவூலத்துறையின் ஆணையர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு வருவாய் மற்றும் பேரிடர் துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். ஹிதேஷ்குமார் மக்வானா ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளராக பொறுப்பு வகித்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து செயலாளராக பொறுப்பு வகித்த சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, வேளாண் உற்பத்தி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் முதன்மை செயலாளர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சுற்றுலா, கலாச்சார துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய கழக நிர்வாக இயக்குனர் கிரியோஷ்குமார் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் கழகத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தொழில்துறையின் சிறப்புச் செயலாளர்  அருண் ராய் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா ஐ.ஏ.எஸ். போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் செல்வி அபூர்வா ஐ.ஏ.எஸ்., கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல் துறையின் முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவண்ணன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ். எரிசக்தி துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோ- ஆப்டெக்ஸ் துறையின் முதன்மை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு நிர்வாக சீர்த்திருத்த துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி, டெக்ஸ்டைல் துறையின் முதன்மை செயலாளர் ஷாம்பூ கல்லோலிகர் ஐ.ஏ.எஸ். பணியிடம் மாற்றப்பட்டு, சமூகநலத்துறை மற்றும் சத்துணவு திட்ட முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். லால்வேனா ஐ.ஏ.எஸ். மாற்றுத்திறனாளி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget