மேலும் அறிய

CM Stalin: மகாராஷ்ராவில் கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்கள்: ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

மகாராஷ்ராவில் கிரேன் சரிந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.

CM Stalin: மகாராஷ்ராவில் கிரேன் சரிந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார்.

கிரேன் சரிந்து விழுந்து விபத்து:

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் கட்டப்படும் பாலத்தின் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் எனப்படும் ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டது. திடீரென அந்த ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 20 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்வர்களில் இரண்டு பேர் தமிழகர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் என்பதும், அவர் VSL கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்ததாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது உடல் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் எனவும் தெரிய வந்துள்ளது.

நிதியுதவி அறிவிப்பு:

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில் இருவர் கிருஷ்ணகிரி மாவட்டம். போகனப்பள்ளி ஊராட்சி, விஐபி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 36) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 23) என்றும் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசின் பொதுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மேற்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,  ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிரா அரசு ரூ. 5 லட்சமும்,  மத்திய அரசு ரூ.2 லட்ச நிவாரணமும் அறிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

எஸ்பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க; நீதிமன்றம் கறார்!

INDIA Alliance Meet President: மோடி தயங்குவது ஏன்? குடியரசுத் தலைவரைச் சந்தித்தபின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேட்டி..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget