மேலும் அறிய

Erode East By Election: ஈரோடு மாவட்டத்திற்கு வந்திறங்கிய 180 வீரர்கள்.. பாதுகாப்பு வளையத்தில் ஈரோடு மாவட்டம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய பாதுகாப்பு படையினர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய பாதுகாப்பு படையினர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பமனு தாக்கல் பிப். 7ஆம் தேதிஒ  நிறைவுபெற்றது, பிப் 8ஆம் தேது  வேட்புமனு சரிபார்க்கப்பட்டது. வேட்ப மனுவை திரும்ப பெற நேற்று (பிப்ரவரி 10ஆம் தேதி) கடைசி நாள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தரப்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மத்தியப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்திருந்தார். ஈரோடு இடைத்தேர்தலுக்காக 5 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர். பிப்ரவரி 12ஆம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 2ம் தேதி வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் பட்சத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் அதிகாரி, தேர்தல் அலுவலர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. Sensitive zone (அ) பதற்றமான பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

வாக்கு பதிவு செய்யும் இவிஎம் மிஷின்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள். அதேபோல், வாக்கு பதிவு செய்யும் நாளான பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு எந்த இடையூறும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை நடைபெற பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள்.   வன்முறையில் ஈடுபடும் நபர்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் 2 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டத ஆனால் கூடுதலாக 3 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய பாதுகாப்பு படையினர் ஈரோட்டிற்கு இன்று வருகை தந்துள்ளனர். 180 வீரர்களும் நாளை முதல் பணியில் ஈடுபடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 முன்னதாக, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இடைத்தேர்தல் பொது பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவும், காவல் பார்வையாளராக மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

தலைப்பு செய்திகள்

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
Theni power cut (03-08-2026): தேனியில் மின்தடை: ஆகஸ்ட் 3 அன்று எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
தேனியில் மின்தடை: ஆகஸ்ட் 3 அன்று எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் கனமழை பொளக்க போகுது? - சென்னை வானிலை அறிக்கை
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் கனமழை பொளக்க போகுது? - சென்னை வானிலை அறிக்கை
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget