TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்..! 17 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..! இன்றைய நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கோடை காலம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
17 மாவட்டங்களில் சதம்:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,
22.04.2023 மற்றும் 25.04.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
21.04.2023 மற்றும் 22.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்னும் கத்திரி வெயில் தொடங்காத நிலையில் ஈரோடு, கரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் ஈரோடு – 40.8, திருச்சி – 40.1, வேலூர் – 40.3, திருத்தணி – 39.8, திருப்பத்தூர் – 39.6, மதுரை – 39.8, நாமக்கல் – 39.0, பாளையங்கோட்டை – 39, சேலம் – 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாகையில் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது. அதேபோல் கரூரில் இயல்பை விட 3.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் – 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். சென்னை நுங்கம்பாக்கத்தில் – 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.