மேலும் அறிய
IPS Transfer: 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!
16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
![IPS Transfer: 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு! 16 IPS Officers transfer Tamilnadu government action order IPS Transfer: 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/11/b5441e2a4d9bd2a181de0c04853bfed31697037906666572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அரசு
IPS Transfer: 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது துறை வாரியாக அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அரசுத்துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டனர். அந்த வகையில் தற்போது, ஐபிஎஸ் அதிகாரிகள் 16 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
- குடிமைப்பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபி வன்னிய பெருமாள், ஊர்க்காவல் படை டிஜிபி ஆக பணியிட மாற்றம்.
- சென்னை காவலர் பயிற்சி கல்லூரி ஐஜி தமிழ்ச்சந்திரன், TNUSRB உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி ஆக ஜோஷி நிர்மல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை வடக்கு மண்டல சட்டம், ஒழுங்கு காவல் இணை ஆணையராக அபிஷேக் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜி ஆக திஷா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை தலைமையக டிஜஜி ஆக ஐபிஎஸ் அதிகாரி சாமுண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எஸ்.பி ஆக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி ஆக ஹரி கிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்து தீபா சத்யன், தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு ஏ.ஐ.ஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
5 மாவட்ட எஸ்.பிக்கள் பணியிட மாற்றம்:
- தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுந்தரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆக சுந்தரவதனம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion