Yercaud Bus Accident: ஏற்காட்டில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பேருந்து - பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி கீழே வந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் மக்கள் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஊட்டி, கொடைக்கானல் போல மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக ஏலகிரி உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏலகிரி மிகவும் முக்கியமான சுற்றுலா தளம் ஆகும்.
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து:
இந்த நிலையில், ஏற்காட்டில் இருந்து இன்று மாலையில் சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று கீழ் நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில், மலைப்பாதையில் உள்ள முனியப்பன் கோயில் அருகில் பேருந்து வந்து கொண்டு இருந்தபோது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், தனியார் பேருந்து சாலையில் இருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஓடியது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்தனர். பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து மறுசாலை அருகே முட்டி மோதி நின்றது.
4 பேர் உயிரிழப்பு:
30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்த நிலையில், சிறுவன் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் சென்று காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் கடும் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் சிலரில் 4 பேர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தனர்.
ஏற்காட்டில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!https://t.co/wupaoCz9iu | #Yercaud #salem #Tamilnadu #accident pic.twitter.com/lvwI0J1fsv
— ABP Nadu (@abpnadu) April 30, 2024
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மலைப்பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30km வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்கள் மற்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கோடை காலம் என்பதால் ஏற்காட்டிற்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு அனுபவம் உடைய ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்.
இதற்கென ஏற்காடு அடிவார சோதனைச் சாவடியிலேயே காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் மூலம் ஆய்வு செய்த பின்னர் மட்டுமே வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 58 பேர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.