மேலும் அறிய

சாப்பாட்டில் தூக்க மாத்திரை.. மதுவில் விஷம்.. கணவனை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த மனைவி!

கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு சாப்பிட்ட எல்லாவற்றிலும் பூச்சி மருந்து, தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேட்டூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு மது, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

திருமணம் தாண்டிய உறவு

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரைக்காடு வீரபத்திரன் கொட்டாயை சேர்ந்தவர் 37 வயதாகும் சக்திவேல். இவரது மனைவி 27 வயது புகழரசி ஆவார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர். தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த சக்திவேல் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். புகழரசிக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வந்த உறவினர் முத்துக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

சாப்பாட்டில் தூக்க மாத்திரை.. மதுவில் விஷம்.. கணவனை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த மனைவி!

கணவன் மனைவி சண்டை

இதனை சக்திவேல் கண்டித்து வந்ததால் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு புகழரசி தாரமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். சில மாதங்களுக்கு பிறகு ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி மீண்டும் இருவரையும் ஒன்றாக வாழ வைத்தனர். வீடு அருகருகே இருந்தால்தான் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது என, அரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விவசாய நிலத்தில் குடிசை போட்டு சக்திவேல் மனைவி குழந்தைகளுடன் அங்கு சென்று வசித்து வந்தார்.

தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!

சதித்திட்டம்

தூரம் சென்றும் முத்துக்குமாருடன் ஏற்பட்ட தொடர்பை புகழரசி கைவிடவில்லை. இதனால் தினமும் மது அருந்தி வரும் சக்திவேல், புகழரசியின் கள்ளத்தொடர்பு பற்றி ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனின் வார்த்தைகளை சகித்துக்கொள்ள முடியாத புகழரசி, இனி நாம் நிம்மதியாக வழவேண்டும் என்றால் கணவன் உயிருடன் இருக்கக்கூடாது என்று முடிவு செய்துள்ளார். இதற்காக முத்துக்குமாருடன் சேர்ந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்.

சாப்பாட்டில் தூக்க மாத்திரை.. மதுவில் விஷம்.. கணவனை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த மனைவி!

பூச்சி மருந்து

நேற்று முன்தினம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்று வீடு திரும்பிய சக்திவேல் மனைவியிடம் சமைக்க சொல்லிவிட்டு வெளியே சென்று வந்தார். சமைத்த சாப்பாட்டில் 10 தூக்க மாத்திரைகளை தூள் செய்து போட்ட புகழரசி, அதனை சக்திவேலுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். பின்னர் குடிக்கும் தண்ணீரிலும் பூச்சிக்கொல்லி மருந்தை கலக்கி கொடுத்துள்ளார். அதேபோல் வீட்டில் வைத்திருந்த மதுவிலும் பூச்சி மருந்து கலக்கி கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து டீ கேட்கவே டீயிலும் பூச்சி மருந்தை போட்டு கொடுத்தாராம். நள்ளிரவில் திடீரென சக்திவேலுக்கு வலிப்பு ஏற்படவே புகழரசி முத்துகுமாரை செல்போனில் அழைத்துள்ளார். முத்துகுமார் வந்து பார்த்தபோது சக்திவேல் இறந்து கிடந்தார்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து புகழரசிக்கு ரகசியமாக வாங்கி கொடுத்த செல்போனை வாங்கிக் கொண்டு அங்கிருந்து முத்துகுமார் சென்றுவிட்டார். அவர் இறந்ததை உறுதி செய்த புகழரசி, தனது மகன் மூலம் கணவனின் தம்பி முத்துசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். தூங்கியவர் அசையாமல் இருப்பதாக புகழரசி கூறவே, சந்தேகமடைந்த முத்துசாமி கொளத்தூர் போலீசில் புகாரளித்தார். புகாரின்பேரில் புகழரசி, முத்துக்குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தபோது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கொளத்தூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையிலடைத்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget