Watch Video: அரசு பேருந்து மீது கல்வீச்சு, சேலம் ஆத்தூரில் பாமகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு..
அரசு பேருந்து முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. இந்நிலையில், பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்த இருவரை ஆத்தூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
வன்னிய சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் சிலை முன்பு சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அவ்வழியாக வந்த அரசு நகர பேருந்துகளை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
PMK cadres blocked roads and pelted stones at Government bus near Athur in Salem after MHC quashed 10.5 internal reservation for Vanniyars in the MBC quota since it was unconstitutional. pic.twitter.com/xlIozbOW9Z
— Prabhakar Tamilarasu || பிரபாகர் தமிழரசு (@pkr_madras) November 1, 2021
வீடியோவில், அரசு பேருந்து முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. இந்நிலையில், பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்த இருவரை ஆத்தூர் நகர போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னிய சமுதாயத்திற்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கி சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று உயர்நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு அளித்ததுள்ளது. இந்த உத்தரவைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களிலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு தேர்தல் கால மோசடி நாடகம் என்று மநீம அப்போதே கண்டித்தது; இன்று இந்தச் சட்டத்தைக் கடுமையான விமர்சனங்களுடன் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோசடியை அரங்கேற்றி வாக்குகளை அறுவடை செய்தவர்களின் பதில் என்ன?
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2021
மேலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொட்டும் மழையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் இராமதாஸ், மாநில துணை தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இது குறித்து, சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ் கூறுகையில், ”கடந்த 40 ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு போராடி பெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்திருப்பது சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, இட ஒதுக்கீடு உரிமையைப் பாதுகாக்க வேண்டும். மீண்டும் இட ஒதுக்கீடு உறுதி செய்யும் வகையில் போராட்டம் தொடர்ந்து நடத்துவோம் என்றும், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னிய சமூகத்திற்கு செய்த துரோகம்” என்று கூறினார்.
#திருப்பத்தூர் மாவட்டம் வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு டி கே ராஜா அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது #VanniyarReservation #PMK pic.twitter.com/S1HmoqdJOL
— வன்னியர் குரல் (@vanniyar_kural) November 1, 2021
கிருஷ்ணகிரி ஆட்சியர்
— பி.டி.தியாகராஜன் (@Thiyaguptn) November 1, 2021
அலுவலகம் எதிரில் நடு சாலையில் அமர்ந்து
வன்னியர் தனி இட ஒதுக்கீடு 10.5% ரத்து
செய்யப்பட்டதைத் கண்டித்து முதற்கட்ட
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது..!! pic.twitter.com/cxEq082gqd
மேலும் , சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் சாலை மறியலில் வன்னியர் பேரவை மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இணைந்து நடத்தி வருகின்றனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பு ஏற்பட்டது.
10.5% உள்ஒதுக்கீடு ரத்து செய்யும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்