மேலும் அறிய
Advertisement
தருமபுரியிலும் கூட்டணி தர்மத்தை மீறிய திமுக...! - அரசுப்பேருந்தில் கல்லை எறிந்து சினம் காட்டிய சிறுத்தைகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சின்னவேடிக்கு 7 வாக்குகளும் கிடைத்த நிலையில் திமுகவை சேர்ந்த சாந்தி வெற்றி பெற்றதாக அறிவிப்பு
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக 10 வார்டுகளிலும், பாமக 3 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்த பேரூராட்சி தலைவர் பதிவுகளுக்கான பட்டியலில் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் திமுகவிற்கு ஒதுக்கவில்லை. இந்த பேரூராட்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் சின்னவேடி என்பவர் அக்கட்சியால் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
இந்த நிலையில் விசிக வேட்பாளர் சின்னவேடியை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த சாந்தி என்பவர் போட்டியிட்டார். இதில் சாந்திக்கு 8 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சின்னவேடிக்கு 7 வாக்குகளும் கிடைத்த நிலையில் திமுகவை சேர்ந்த சாந்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பொ.மல்லபுரம் பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திமுகவைச் சேர்ந்த உறுப்பினருக்கு தலைவர் பதவியை அளிக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட பேரிகார்டுகளை தகர்த்திவிட்டு பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி கோஷங்களை எழுப்பி பின்பு பேரூராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆக்ரோஷமாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன் துரோகம் விளைவிப்பதாகவும் கூட்டணி தர்மத்திற்கு அவர் துரோகம் செய்துள்ளதாகவும் உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கே பேரூராட்சி தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். அப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை, மருதுபாண்டி என்பவர் கண்ணாடியை கட்டையால் அடித்து உடைத்தார். இதனை தொடர்ந்து மருதுபாண்டியை காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் காவல் துறையினர் வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர். அப்பொழுது விசிகவிற்கும், காவல் துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion