மேலும் அறிய

35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.. துரத்திய இதய நோய்.. காலமானார் வீரப்பனின் மூத்த சகோதரர்!

கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்திய மங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் நெஞ்சு வலி காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் (75). இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு சத்திய மங்கலத்தில் வனத்துறை அதிகாரி ரேஞ்சர் சிதம்பரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாதையன், சத்திய மங்கலம் கொலை வழக்கில் தீர்ப்புக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சேலம் மத்திய சிறைக்கும், இங்கிருந்து மீண்டும் கோவை சிறைக்கும் மாற்றப்பட்டார்.

35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.. துரத்திய இதய நோய்.. காலமானார் வீரப்பனின் மூத்த சகோதரர்!

கடந்த 7 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப் பட்டிருந்தார். அவர், இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 35 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். தனது 40 வயதில் சிறைக்குச் சென்று ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இவரை விடுதலை செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சியினர் கோரிக்கை எழுப்பி வந்தார்.

இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் மாதையன் அவ்வப்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். அவருக்கு அவ்வப் போது சிறை அதிகாரிகள் பரோல் வழங்குவர். கடந்த மாதத்தில் 15 நாட்களுக்கு பரோலில் சென்று திரும்பிய மாதையனுக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.. துரத்திய இதய நோய்.. காலமானார் வீரப்பனின் மூத்த சகோதரர்!

நேற்று முன்தினம் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் நெஞ்சு வலி காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் இன்று (25.05.2022) காலை 5:45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக சிறையிலிருந்து மாதையனை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்து வந்த நிலையில் மாதையன் உயிரிழந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் மட்டுமன்றி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget