மேலும் அறிய

Mettur Dam | மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,812 கன அடியில் இருந்து, 12,396 கன அடியாக குறைந்தது..

கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 19,149 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 14,812 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு 12,396 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam | மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,812 கன அடியில் இருந்து, 12,396 கன அடியாக குறைந்தது..

அணையின் நீர் மட்டம் 119 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 91.88 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 18,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டுவரும் நீரின் அளவும் வினாடிக்கு 350 கன அடியில் இருந்து 150 கன அடியாக குறைப்பு. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை , கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை சாகுபடிக்கான பணிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் சம்பா சாகுபடிக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து நீரானது திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam | மேட்டூர் அணையின் நீர் வரத்து 14,812 கன அடியில் இருந்து, 12,396 கன அடியாக குறைந்தது..

கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,492 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6,283 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 64.94 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,174 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 1,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது . 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?

Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி

Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!

ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?

அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்

Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?

"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Embed widget