மேலும் அறிய
முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் காதுகேட்காத குழந்தைக்கு செய்யப்பட்ட இலவச அறுவை சிகிச்சை
’’இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 15 லட்சம் வரை செலவாகும். இதில் கருவி மட்டுமே 7 லட்சம்; ஆனால் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது’’

அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிறுவன்
தருமபுரி மாவட்டத்தில் முதன்முதலாக செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காது முற்றிலும் கேட்காத ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காக்கிளர் இம்ப்ளான்ட் கருவியை அறுவை சிகிச்சை மூலம் காதுக்குள் பொருத்தும் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது-மூக்கு-தொண்டை துறை மூலம் கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்ட மொரப்பூர் அடுத்த எலவடை கிராமத்தைச் சேர்ந்த சங்கர்-நர்மதா தம்பதிகளின் ஆண் குழந்தையை முறையாக பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை மூலம் காக்கிளர் இம்ப்ளான்ட் உள்ளமைப்பு கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது குழந்தைக்கு அறுவை சிகிச்சை முடிந்து, குழந்தைக்கு செவி திறன் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக குழந்தைக்கு செவி திறன் கிடைத்துள்ளதால், குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களுக்கும், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரி துறை தலைவர் டாக்டர் செந்தில்குமார்,
கடந்த ஜூலை 17ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் காக்கிளர் இம்பிளான்ட் (காதுக்குள்) கருவிகள் பொருத்தம் அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் அறுவை சிகிச்சை செய்தார். இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இதில் இதில் கருவி மட்டுமே 7 லட்சம் ரூபாய்.
ஆனால் இந்த அறுவை சிகிச்சையை நமது தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தற்பொழுது இந்த அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக தயார் நிலையில் இருந்து வருகிறோம்.
இந்த அறுவை சிகிச்சை பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஆறு வயதிற்குள் அடையாளம் காணப்பட்டு அறுவை சிகிச்சை செய்தால் பலன் அளிக்கும். இதற்கான அனைத்து வசதிகளும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது இதனை தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement