மேலும் அறிய
Advertisement
அரசுப்பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் - வீடியோ வைரல் ஆனதால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
பள்ளியின் தலைமையாசிரியை சென்னம்மாள் மற்றும் பட்டாதாரி ஆசிரியர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கும்மனூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தலைமையாசிரியர் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8 வரை 81 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், பள்ளி மாணவர்கள், கழிவறைக்கு தேவையான தண்ணீரை, கிராமத்தில் உள்ள ஆழமான தொட்டியில் இருந்து எடுத்து நிரப்பி வருகின்றனர். இதில் தொட்டி தரையில் இருப்பதால், ஆபத்தான முறையில், தொட்டியில் குணிந்து எடுத்து சென்று கழிவறைகள், ஆசிரியர்களின் கழிவறைக்கு தண்ணீர் எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் எடுத்து செல்லும் வீடியோவானது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வந்தது. இதனையடுத்து மாணவர்களை பள்ளியை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தும் தொடர்ந்து இது போன்ற பள்ளிகளில் மாணவர்களை வேலை வாங்கும் செயல் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுப்படி, பாலக்கோடு மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணி பள்ளியில் விசாரனை நடத்தி அறிக்கை கொடுத்தார். இதனை தொடர்ந்து மாணவர்களை ஆபத்தான முறையில் பணி செய்ய வைத்ததாக, பள்ளியின் தலைமையாசிரியை சென்னம்மாள் மற்றும் பட்டாதாரி ஆசிரியர் சந்திரசேகர் ஆகிய இருவரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கிரேன் வாகனம் சாலையோரம் இருந்த இரண்டு கடைகளுக்குள் நுழைந்ததால் பரபரப்பு
தருமபுரி மாவட்டம் அரூர் திருவிக நகர் அருகே அரூர்-சேலம் பிரதான சாலையில் கிரேன் வாகனம் வந்துள்ளது. இந்த வாகனம் இந்த வாகனம் நான்கு வழி சாலை போடுவதற்காகஸ்ரீ பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓட்டநரின் கட்டுப்பாட்டை இழந்த கிரேன், அருகில் இருந்யை முடித்துவிட்டு வரும் போது, ஓட்டுநரின் கட்டும திருவிக நகரில் உள்ள பீரோ ஒர்க்ஸ் சாப் மற்றும் அதன் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டிற்க்குள் கிரேன் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து உள்ளே நுழைந்தது. இதில் ஒர்க்ப்பில் வேலை செய்தவர்கள் மற்றும் அருகாமையில் இருந்த நபர்கள் நூலிழையில் உயிர் தப்பினார். ஆனால் அங்கே நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனம் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலறிந்து வந்த காவல் துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி கிரேன் ஓட்டுநரை கொண்டு இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேனை வெளியில் எடுத்தனர். மேலும் இந்த வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர் அதிகப்படியான மது போதையில் இருந்ததாகவும் இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion