மேலும் அறிய

மாநில எல்லைகளில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லாரிகள் நிறுத்தப்படும் - தென் மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர்

வருகின்ற 25ஆம் தேதி முதல் இந்திய முழுவதும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க மாட்டோம் என சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பவழ விழாவில் தீர்மானம்.

சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழா நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மாநில சம்மேளன தலைவருமான தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, டெல்லி அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் தலைவர் மதன், தெலுங்கானா மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் துனைதலைவர் ஜவகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பவள விழா கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, தமிழகத்தில் தற்போது உள்ள அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பாக டீசல் ஐந்து ரூபாய் குறைப்பதாக கூறியதை செயல்படாமல் உள்ளார். 

மாநில எல்லைகளில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லாரிகள் நிறுத்தப்படும் - தென் மாநில லாரி உரிமையாளர் சங்க  தலைவர்

அதேபோல், சுங்கச்சாவடிகளை அகற்றுவதாகவும் வாக்குறுதி அளித்து இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. 11 மாநிலங்களில் டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ஐந்து ரூபாயை குறைக்காமல் தற்போது உள்ள அரசு இருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார். மேலும் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள 35 சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக அறிவித்த நிலையில், இதுவரை அகற்றப்படாமல் உள்ளது. லாரிகளுக்கு ஒட்டக்கூடிய ஒளிரும் பட்டையை பல்வேறு மாநிலங்களில் 11 நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஐந்து நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு ஒளிரும் பட்டையை ஓட்டுவதற்கு நிர்பந்தப்படுத்துவதை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக ஒவ்வொரு மாநில எல்லைகளிலும் உள்ள செக் போஸ்ட்களில் அதிகாரிகள் லாரிகளிடம் வேறு மாநிலத்திற்கு செல்வதற்கும், வேறு மாநிலத்திலிருந்து சொந்த மாநிலத்துக்கு வருவதற்கும் லஞ்சம் கேட்கின்றனர். ஆயிரம் ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை லஞ்சம் பெறுவது கண்டிக்கத்தக்கது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என்றார்.

மாநில எல்லைகளில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லாரிகள் நிறுத்தப்படும் - தென் மாநில லாரி உரிமையாளர் சங்க  தலைவர்

அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் எதற்காக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டும் என தெரிவித்தார். எனவே வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி முதல் மாநில எல்லைகளில் உள்ள செக் போஸ்ட் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் பணம் தர மாட்டோம். மீறி வற்புறுத்தினால் அங்கேயே வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் போவதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வரியை கட்டச் சொல்லி வற்புறுத்துவதை குறைக்க வேண்டும், உள்ளிட்ட இந்திய முழுவதும் உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரைவில் நடைபெற உள்ள அகில இந்திய மோட்டார் ட்ரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் விவாதித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget