மேலும் அறிய

தருமபுரி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3,600 கிலோ குட்கா பறிமுதல்

தருமபுரி வழியாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகமாக கடத்தப்படுவதாகவும், அதனை முழுதும் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

தமிழகம் முழுவதும் குட்கா, புகையிலை, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போன்ற கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு  உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சி.கலைச்செல்வன் உத்தரவுப்படி, தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் தொப்பூர் காவல் ஆய்வாளர் மாதேஷ், ஐயப்பன், மணிகண்டன், பாலமுருகன் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் குமுதா, முருகன், ஆறுமுகம், உமாமகேஸ்வரி ஆகியோர் அடங்கிய காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் பாளையம் சுங்க சாவடி பகுதியில் தொப்பூர் காவல் துறையினர் மற்றும் தருமபுரி ஆயுதப்படை பிரிவை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது பெங்களூருவில் இருந்து கேரளாவிற்கு சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். இந்த லாரி ஓட்டுனர் ரஸித் மற்றும் கிளீனர் அஸ்ரப் அலி உள்ளிட்டோர் மாட்டுத் தீவனம் ஏற்றிச் செல்வதாக கூறியுள்ளனர். அதற்குரிய ஆவணங்களையும் காவல் துறையிடம் காண்பித்துள்ளனர். ஆனால் முன்னுக்கு பின் முரணாகவே பதில் அளித்துள்ளனர்.
 

தருமபுரி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3,600 கிலோ குட்கா பறிமுதல்
 
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் வாகனத்தை சோதனையிட்ட போது 118 மூட்டை சாக்குப்பைக்குள் 2 வகையான 3600 கிலோ குட்கா பாக்கெட்டுகள்  மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 23 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் லாரியை பறிமுதல் செய்து லாரியின் டிரைவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளருக்கு வினோத்துக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்து காவல் கண்காணிப்பாளர் வினோத் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி, ஓட்டுநர்கள் ரஸித், அஸ்ரப் அலி இருவரையும் கைது செய்தனர். மேலும் 23 இலட்சம் மதிப்பிலான 118 மூட்டை குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி வழியாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் அதிகமாக கடத்தப்படுவதாகவும், அதனை முழுதும் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தொப்பூர் அருகே 3.5 டன் குட்கா கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Breaking News Tamil LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget