மேலும் அறிய

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் 25.3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (10.11.2021) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று (10.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 5.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வீரகனூரில் 4.8 செ.மீ., ஆத்தூர் 2.8 செ.மீ, பெத்தநாயக்கன்பாளையம் 2.5 செ.மீ., கெங்கவல்லி 1.35 செ.மீ.,  ஏற்காடு பகுதியில் 1.2 செ.மீ, சேலம் மாநகராட்சி பகுதியில் 0.9 செ.மீ, மேட்டூர் 0.38 செ.மீ, எடப்பாடியில் 0.94 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 25.3 செ. மீ மழை பெய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல நாட்களுக்குப் பிறகு திருமணிமுத்தாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. செங்கல் அணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஓடுகிறது. தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள கிச்சிப்பாளையம், நாராயண நகர், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, ஐந்து ரோடு, நான்கு ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை சேலம் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். 

கடந்த வாரம் பெய்த கனமழையால் குப்பனூர் - ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகள் விழுந்தது. இதற்கு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. கனமழையால் டி. பெருமாபாளையம் பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி நிரம்பி அதன் கரை உடைந்ததில் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதில் 2 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்தன. மேலும் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் மிகவும் சேதமடைந்து, அரிசி, பருப்பு, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை இருப்பதும் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி எப்பொழுது வேண்டுமானாலும் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Car Theft : ’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்! - இந்த பட்டியலில் உங்க கார் இருக்கா?
’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்!
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Embed widget