மேலும் அறிய

Car Theft : ’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்! - இந்த பட்டியலில் உங்க கார் இருக்கா?

இந்தியாவில் திருடப்படும் கார்களில் 47 % மாருதி சுசுகி கார்களாக இருப்பதாகவும் டெல்லி NCR பகுதிகளெல்லாம் சராசரியாக 14 நிமிடங்களுக்கு ஒரு வாகனம் திருப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

திருட்டு தொழிலில் பல வகைகள் இருந்தாலும் எப்பேர்பட்ட கார்களையும் தூக்கிக் கொண்டும் போகும் திருடர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். குறிப்பாக, இதற்கென்றே இந்தியாவில் பெரிய சிண்டிகேட் இருப்பதாக சொல்கிறது காவல்துறை வட்டாரம். கார்களை ஒரு மாநிலத்தில் இருந்து திருடி, இன்னொரு மாநிலத்தில் நம்பர் பிளேட் உள்ளிட்டவகைகளை மாற்றி விற்பது, கார்களின் பாகங்களை அக்கக்காக கழற்றி விற்பது என இந்த தொழில் பரந்து விரிந்துள்ளதாகவும் அதே நேரத்தில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கும் திருடப்படும் கார்களே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் திருடப்படும் டாப் 5 கார்கள்

இந்நிலையில், இந்தியாவில் எந்தெந்த கார்கள் அதிக அளவில் திருடப்படுகின்றன என்ற பட்டியலை தேடினோம். அதில் முக்கியமாக முதல் 5 இடத்தை பிடிக்கும் கார்களின் பட்டியலை இங்கே தொகுத்திருக்கிறோம்.

  1. மாருதி சுசுகியின் வேகனார் – கார் வகை அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு காரணம். இந்த காரை அதிக நபர்கள் வாங்க விருப்பப்படுவதும், இதன் உதிரி பாகங்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதுமே காரணம் என கூறப்படுகிறது.
  1. இரண்டாவது இடத்தில் அதே மாருதி நிறுவன தயாரிப்பான Swift ரக கார்கள் இருக்கின்றன. அதற்கு காரணமாக கூறப்படுவது என்னவெனில், இந்த கார்கள் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், எளிதாக திருடப்பட்ட கார்களை மாற்றவும், மறைக்கவும் முடியும்.
  1. மூன்றாவது இடத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் Creta வகை கார்கள் வருகின்றன. இதனை திருட்டு பயலுகள், அதிகமாக விரும்பி திருடுவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் மேற்குறிப்பிட்ட இரண்டு கார்களைவிடவும் இது சொகுசு கார் ரக கார் என்பதாலும் SUV வகை கார்களுக்கு சந்தைகளில் நல்ல டிமாண்டுகள் இருப்பதும் காரணமாக சொல்கிறார்கள் கார் ஆய்வாளர்கள்.
  1. அதே நேரத்தில் 4வது இடத்திலும் ஹூண்டாய் நிறுவன காரான Grand I10 கார்கள் இருக்கின்றன. இந்த கார்களை நடுத்தர குடும்பத்தினர் மறுவிற்பனையில் விரும்பி வாங்குவதும் இதன் உதிரி பாகங்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதும் காரணமாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
  1. ஐந்தாவது இடத்தில் இருப்பது மாருதி சுசுகி நிறுவன தயாரிப்பான Swift Dzire கார்கள். – காரணம் வாடகை கார்கள் ஓட்டுவோர் அதிக அளவில் இந்த கார்களை வாங்குவதாலும் மறுவிற்பனை சந்தைகளில் இந்த காருக்கு நல்ல விலை போவதாலும் இந்த காரும் திருடப்படும் கார்கள் பட்டியலில் முதல் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது

பிசினஸ் ஸ்டாண்டர்ட் நிறுவனத்தின் ஆய்வின் படி இந்தியாவில் திருடப்படும் கார்களில் 47 சதவீதம் மாருதி சுசுகி நிறுவன கார்களாக இருப்பதாகவும் டெல்லி NCR பகுதிகளெல்லாம் சராசரியாக 14 நிமிடங்களுக்கு ஒரு வாகனம் திருப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சியான தகவல்கள் இது குறித்து விசாரிக்கும்போது வெளியாகியிருக்கின்றன.

உங்கள் கார்களை பாதுகாப்பாக வைக்க என்ன செய்ய வேண்டும் ?

  • ஜி.பி.எஸ் டிராக்கரை காரில் கட்டாயம் பொருத்தி வையுங்கள்
  • Steering Wheel Lock பயன்படுத்துங்கள்
  • Immobilizer / அலாரம் சிஸ்டங்கள் செயல்பாட்டில் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்துங்கள்
  • இரவு நேரங்களில் சிசிடிவி உள்ள இடங்களில் மட்டுமே உங்களது காரை நிறுத்துங்கள்
  • ஸ்மார்ட் சாவியை பாதுகாப்பான RFID Pouch- வைத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்

Advertisement

தலைப்பு செய்திகள்

Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget