மேலும் அறிய

Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?

Morning Breakfast Scheme Name Change: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' என மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

கூடவே, தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அனுமதி

மாணவ/ மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/ மாணவியருக்கு, ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில், ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00,000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.

2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13,57,25,000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் (ரூபாய் ரூ.217,63,09,395/க்கான இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்ன காரணம்?

அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராசர் என்பதால் அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
PG சீட் இன்னும் கிடைக்கலயா? கவலை வேண்டாம்! புதுச்சேரி PTU-வில் ஆகஸ்ட் 14-ல் நேரடிச் சேர்க்கை!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget