மேலும் அறிய

Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!

அரசுப் பள்ளிகளை நீர் மேலாண்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தழுவும் திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் முன்னோடி வளாகங்களாக மாற்றும் நோக்கில், "நீர் எழில் பள்ளி" முன்னெடுப்பு தொடக்கம்.

சென்னை, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக "நீர் எழில் பள்ளி" (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.

என்ன இது?

அரசுப் பள்ளிகளை நீர் மேலாண்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தழுவும் திறன் (Climate Resilience) மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் முன்னோடி வளாகங்களாக மாற்றும் நோக்கில், "நீர் எழில் பள்ளி" (Neer Ezhil Pall) என்ற புதிய முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது.

சென்னை தி.நகரில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் பள்ளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 'நீர் சமநிலை' (Water Balance) திட்டத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலிலும், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் (TNGCC) ஆதரவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் எளிதில் பின்பற்றக்கூடிய, விரிவுபடுத்தக்கூடிய ஒரு மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு

இத்திட்டத்தின் கீழ், இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature-based Solutions NbS) மூலம், பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் நாளொன்றுக்கு சுமார் 25,000 லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாகச் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இதன் மூலம் பசுமையான பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டல், பல்லுயிர் பெருக்கம், நகர்ப்புற வெப்பத் தணிப்பு மற்றும் காலநிலை மீள்திறன் ஆகியவை மேம்படும்.

வழக்கமான இயந்திர அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, இந்த இயற்கை சார்ந்த அமைப்புகள் மண், தாவரங்கள் மற்றும் இயற்கை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை பயன்படுத்தி கழிவுநீரைச் சுத்திகரிக்கின்றன. இதன் மூலம் நீர் சமநிலை மீட்டெடுக்கப்படுவதோடு. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றன.

இந்தத் திட்டத்திற்கு மைக்ரோசாஃப்ட் (Microsoft) மற்றும் எஸ்.ஐ.வி இம்பாக்ட் (SIV Impact) ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. ப்ளூ-கிரீன் என்விரோ ஃபவுண்டேஷன் (BlueGreen Enviro Foundation). சென்னை ரெசிலியன்ஸ் சென்டர் (Chennal Reellence Centre CRC) மற்றும் கேர் எர்த் டிரஸ்ட் (Care Earth Trust - CET) ஆகிய அமைப்புகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றன.

பலகட்ட சுத்திகரிப்பு

முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக மேலும் பத்து அரசுப் பள்ளிகளிலும் இயற்கை சார்ந்த கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான மூலதனச் செலவு (CAPEX) முழுமையாக வழங்கப்படுகிறது. மேலும், இவ்வமைப்புகள் நீண்டகாலம் செயல்திறனுடன் இயங்குவதை உறுதிசெய்ய, பத்து ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவிற்கான (OPEX) ஆதரவும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, விரிவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring & Evaluation - M&E) கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நீர் மீள்திறன், சுற்றுச்சூழல், சமூக மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள் அறிவியல் அடிப்படையில் தொடர்ந்து மதிப்பிடப்படும். இதன் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள், திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மற்றும் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.

நேரடி பங்களிப்பு

"நீர் எழில் பள்ளி" திட்டம், நீர் பாதுகாப்பு, காலநிலைத் தழுவல், நகர்ப்புற மீள்திறன், வெப்பத் தணிப்பு, இயற்கை சார்ந்த தீர்வுகள், நிலையான பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது. அதேவேளையில், பசுமை முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தும் ஒரு செயல்திறன் மிக்க மாதிரியாகவும் இது அமைகிறது.

அரசுப் பள்ளிகளை சுற்றுச்சூழல் புத்தாக்க மையங்களாக மாற்றும் முயற்சியில் "நீர் எழில் பள்ளி" திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் நீர் பாதுகாப்பை மேம்படுத்தி, காலநிலை மீள்திறனை உருவாக்கி, பல்லுயிர் வளத்தைப் பெருக்குவதோடு. மாணவர்களுக்கு நிலைத்தன்மை குறித்த செயல்வழிக் கற்றலையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.

நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்களுக்கு, குறைந்த செலவில் செயல்படுத்தக்கூடிய, அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, விரிவுபடுத்தக்கூடிய இயற்கை சார்ந்த தீர்வாக இந்த முன்னெடுப்பு விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றக்கூடிய முன்னோடி மாதிரியாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பசுமைப் பள்ளிகள் குறித்த தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை நடைமுறையில் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக "நீர் எழில் பள்ளி" திட்டம் அமைவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget