Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (08.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Salem Power Shutdown (08.01.2025): சேலம் மாவட்டம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Salem Power Cut: சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 08-01-2025 கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளைய மின்தடை பகுதிகள்:
தலைவாசல் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தலைவாசல், நத்தக்கரை, ஆறகளூர், ஆரத்தி அகரம், கோவிந்தம்பாளையம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, பெரியேரி, இலுப்பநத்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, தேவியாக்குறிச்சி, மணிவிழுந்தான் காலனி, மணிவிழுந்தான் வடக்கு, மணிவிழுந்தான் தெற்கு, பட்டுத்துறை, நாவக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்துார், புத்துார், நாவலுார், தியாகனுார், காமக்காபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
இன்றைய மின்தடை பகுதிகள்:
சிங்கிபுரம் பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
சிங்கிபுரம், வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனுார்பட்டி, பேளூர், மண் நாயக்கன்பட்டி, முத்தம்பட்டி, திம்ம நாயக்கன்பட்டி, மேற்கு ராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்துார் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
கெங்கவல்லி பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு:
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.
தெடாவூர், கெங்கவல்லி, ஆணையாம்பட்டி, புனல்வாசல், வீரகனூர், கிழக்கு ராஜபாளையம், நடுவலூர், ஒதியத்தூர், பின்னனூர், லத்துவாடி, கணவாய்க்காடு மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.