மேலும் அறிய

Salem Central Jail: சாப்பாடு முதல் சாப்ட்வேர் வரை... மறுவாழ்வு மையமாக மாறிவரும் சேலம் மத்திய சிறைச்சாலை

MS Word, MS Excel, MS PPT, Photoshop, Printing, Xerox operating, Scanning போன்ற அடிப்படை கணினி பயிற்சி வகுப்புகள் ஆர்வமுள்ள நன்னடத்தை சிறைவாசிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறையில் தண்டனைக் கைதிகள், தடுப்புக் காவல் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில், சிறைக்கைதிகள் தண்டனைக் காலம் முடிந்து திரும்பும்போது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் தொழிற் பயிற்சி வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிறைக்கு வருவதற்கு முன்னர் நல்ல முறையில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனித்திறமைகள் கொண்ட சிறைக்கைதிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் வாயிலாக மற்ற சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

Salem Central Jail: சாப்பாடு முதல் சாப்ட்வேர் வரை... மறுவாழ்வு மையமாக மாறிவரும் சேலம் மத்திய சிறைச்சாலை

சிறைவாசிகளுக்கு கணினி பயிற்சி:

இதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கான கணினி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணினி பயிற்சி வகுப்பில் MS Word, MS Excel, MS PPT, Photoshop, Printing, Xerox operating, Scanning போன்ற அடிப்படை கணினி பயிற்சிகள் கற்று தரப்படும். இந்த பயிற்சிக்கு ஆர்வமுள்ள நன்னடத்தை சிறைவாசிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுத்த கணினி திறன் வாய்ந்த சிறைக்காவலர்கள் மூலம் சிறைவாசிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. ஞாயிறு விடுமுறை தவிர மற்ற ஆறு தினங்களிலும் சிறைவாசிகளுக்கு கணினி பயிற்சி வழக்கப்படும். மேலும் வரும்காலங்களில் பிரபல கணினி பயிற்சி நிறுவனம் மூலம் சிறைவாசிகளுக்கு டிப்ளமோ வகுப்பு நடத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழக்கப்படும். இப்பயிற்சியின் மூலம் சிறைவாசிகளின் விடுதலைக்கு பின்னர் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் துவங்குவதற்கு அல்லது கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் என சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத் தெரிவித்தார்.

பரோட்டா மாஸ்டர் பயிற்சி:

இதேபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பரோட்டா மாஸ்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முழுமையாக அனைவருக்கும் பரோட்டா மாவு வழங்கப்பட்டு செயல்முறை பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, சிறு வணிகக்கடை வைத்தல் போன்ற பயிற்சியை வாரம் தோறும் வழங்கவும் சிறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

Salem Central Jail: சாப்பாடு முதல் சாப்ட்வேர் வரை... மறுவாழ்வு மையமாக மாறிவரும் சேலம் மத்திய சிறைச்சாலை

சிறை பஜார்:

மேலும், சேலம் மத்திய சிறையில் சிறைக்கைதிகளை வைத்து "பிரிசன் பஜார்" என்ற பெயரில் பிஸ்கெட், பிரட், பன், காரச் சேவ், மிக்ஸர், முறுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்த சிறையில் தயாரிக்கப்படும் பிரட் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளை கொண்டு பிரிசன் பஜாரில் புதிதாக டீ, காபி, முட்டை பப்ஸ், வெஜ் பப்ஸ், உளுந்த வடை, மசால் வடை, முட்டை போண்டா, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிஸ்கட் வகைகள், லட்டு, பாதுஷா, சமோசா, மைசூர் பாகு, இட்லி, ஊத்தாப்பம், பூரி, பொங்கல், ஆனியன் தோசை, மசால் தோசை, சாப்பாடு, தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட உணவுகள் அறிமுகம் செய்யப்பட்டு கைதிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

கல்வியிலும் டாப்:

இது மட்டுமின்றி, கல்வியிலும் சேலம் மத்திய சிறை சிறைவாசிகள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சேலம் மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய சிறைவாசிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறைச்சாலைகள் தண்டனைக் கூடங்களாக இல்லாமல் தவறை உணர்ந்து திருந்த நினைப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்களாக மாற்றம் பெறுவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget