மேலும் அறிய
Advertisement
ருத்ரதாண்டவம் படத்திற்காக தடையை மீறி நடத்தப்பட்ட ஊர்வலம் - போலீசை கண்டதும் சிதறி ஓடிய இளைஞர்கள்
’’சைரன் ஓசையுடன் வந்த காவல் துறை வாகனத்தை கண்டதும், ஊர்வலமாக வந்த இளைஞர்கள் அங்கும் இங்குமாக சிதறி, தெரித்து ஓடினர்’’
தருமபுரியில் இரண்டு திரையரங்குளில் இயக்குநர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்க்க பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பெரியார் சிலையிலிருந்து திரையரங்கிற்கு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் பாமக கட்சி கொடிகளை பிடித்துக் கொண்டும், மேள தாளங்களுடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டு நடனமாடி சென்றனர். தொடர்ந்து கொரோனா 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி மேள தாளத்துடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டு, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சென்றனர். தொடர்ந்து ரகளையில் ஈடுப்பட்டவாறே பாமக மற்றும் வன்னியர்களுக்காக சங்க இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர்.
இந்த தகவல் அறிந்து வந்த தருமபுரி நகர காவல் துறையினர் இந்த ஊர்வலத்தை தடுத்தனர். அப்போது காவலர் ஒருவரை கூட்டத்தினர் சுற்றி வளைத்து பிடித்து தள்ளினர். இதனையடுத்து அங்கு சைரன் ஓசையுடன் வந்த காவல் துறை வாகனத்தை கண்டதும், ஊர்வலமாக வந்த இளைஞர்கள் அங்கும் இங்குமாக சிதறி, தெரித்து ஓடினர். அதனையடுத்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றவர்கள் என 5 பேரை காவல் துறையினர் பிடித்து கைது செய்தனர்.
மேலும் கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூடியது, அனுதியின்றி ஊர்வலமாக சென்றதாக, 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து ஊர்வலத்தில் வந்தவர்களின் பெயர் மற்றும் விலசாங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர். தொடர்ந்து ருத்ர தாண்டவம் படம் ரிலீஸையொட்டி, தருமபுரி நகரில் இளைஞர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்ற சம்பவத்தால் தருமபுரி நகரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பாகவே காணப்பட்டது.
பாப்பாரப்பட்டி அருகே இறந்த காவலர் ராஜ்குமாரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூகானஅள்ளி ஊராட்சி பொம்பரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது பாலக்கோடு காவல் உட்கோட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். தொடர்ந்து காவலர் ராஜ்குமாருக்கு திருமணமாகி, மனைவி தமிழ்ச்செல்வி, குழந்தைகள் நிஷாந்தினி (4) அக்சரா (2) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவி தமிழ்ச்செல்வி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் ராஜ்குமார் கடந்த 26 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாத்திரை வாங்க, புளிகரையில் உள்ள மருந்தகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தொடர்ந்து மருந்து, மாத்திரை வாங்கி கொண்டு புளிகரையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய போது, சாலையில் குறுக்கே எதிர்பாராத விதமாக நாய் வந்துள்ளது. இதில் இருசக்கர வாகனம் நாய் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து விபத்தில் படுகாயமடைந்த காவலர் ராஜ்குமாரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை காவலர் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராஜ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து உயிரிழந்த காவலர் ராஜ்குமார் உடலுக்கு காவல் துறை சார்பில், பாலக்கோட் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து காவலரின் உடல் குல வழக்கப்படி ஊர்வலமாக எடுத்து சென்று கிராமத்தில் உள்ள மயானத்தில் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான காவலர்கள், காவல் துறை முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க உடலை நல்லடக்கம் செய்தனர். தொடர்ந்து சிறு குழந்தைகள், கர்பிணி மனைவி உள்ள நிலையில் காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தை ஆழ்த்தியது. தொடர்ந்து சிறு குழந்தைகளுடன் ஆதரவின்றி தவிக்கும், காவலரின் குடும்பத்திற்கு, அரசு பணி வழங்க வேண்டும் என உறவினர்களும், கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion