மேலும் அறிய
Advertisement
சித்தேரி மலை உச்சியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மலைவாழ் மக்கள் பொங்கல் வழிபாடு
மலைவாழ் மக்கள் ஆண்டுதோறும் பொங்கலுக்கு அடுத்த நாளில் சித்தேரி மலை உச்சிக்கு வந்து தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து, குல வழக்கப்படி பொங்கல் வைத்து வழிபாடு நடத்திவிட்டு செல்வது வழக்கம்
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை கிராம ஊராட்சியில் சித்தேரி, தோல்தூக்கி, அரசநத்தம், கலசப்பாடி, சூரியக்கடை, பேரேரி புதூர், அழகூர், ஜக்கம்பட்டி, சேலூர் அம்மாபாளையம் உள்ளிட்ட 64 மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் மலைவாழ் மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்தில் உள்ள அழகூர், ஜக்கம்பட்டி பகுதியில் மலையின் உச்சியில் ஒரே பாறையில் அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3600 அடி உயரத்தில் பொட்டமலை மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீ கரிய பெருமாள், வெங்கட்ரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் பொங்கல் அடுத்த கரி நாளில், 64 மலை கிராம மக்கள் ஒன்று கூடி தங்களது முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம். மலையின் மேல் அலங்கரிக்கப்பட்ட சாமியை தோல் மீது தூக்கியவாறு ஒத்தையடி பாதையில் நடந்து சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்வது வழக்கம் .
இந்த பொங்கல் விழாவில் சித்தேரி மலை மீது அரசர் காலத்தில் இருந்து தொடர்ந்து குரு என்று அழைக்கப்படும் வம்சாவளியில் லட்சுமணன், மந்திரி பூபாலன், கிராமத்தின் ஊர் கவுண்டர்கள். தலைமையில் 10 நாட்களுக்கு முன்பாகவே மலைவாழ் மக்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து அருள்மிகு ஸ்ரீ கரியபருமாள் வெங்கட்ரமண சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு பொங்கலுக்கு அடுத்த நாள் மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அலங்கரிக்கப்பட்ட சாமியை தோல் மீது வைத்து மலையின் உச்சிக்கு எடுத்து சென்றனர். அங்கு பெண்கள் ஒன்றிணைந்து விறகு அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மேலும் இவர்கள் குல வழக்கப்படி சாமி கும்பிட்ட பிறகு, பெண்கள் கூடி கும்மி பாட்டு பாடி, பாரம்பரிய நடனம் ஆடினர். தொடர்ந்து சாமியை மலை மீது ஊர்வலமாக எடுத்து விளையாடினர். இதனை தொடர்ந்து பொங்கலை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கினர். இந்த விழாவிற்கு ஆண்டுதோறும் சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான மலை கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். மலைவாழ் மக்கள் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்தாலும், ஆண்டுதோறும் பொங்கலுக்கு அடுத்த நாளில் சித்தேரி மலை உச்சிக்கு வந்து தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து, குல வழக்கப்படி பொங்கல் வைத்து வழிபாடு நடத்திவிட்டு செல்வது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion