மேலும் அறிய

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்

500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருட்டுப் போயுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடந்தும், கோவில் பாதுகாப்பு படையினருக்கு பல கோடி செலவு செய்தும் இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு.

சேலத்தில் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, கோவில் பாதுகாப்பு படைக்கு 2018 வரை ரூ.13 கோடி செலவானது. மொத்தமாக இதுவரை ரூ.172 கோடி செலவாகியுள்ளது. இந்த பணம் மக்கள் வரிப்பணம். மக்கள் வரிப்பணத்தில் இருந்து காவல்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்காமல், அறநிலையத்துறை மாதத்திற்கு ரூ.55 கோடி வரியாக வசூலிக்கிறது. அறநிலையத்துறை அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவருக்கும் கோவிலுக்கு வரியாக போடப்படும் பணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.428 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இது உச்சகட்ட அநியாயம். மேலும் மோசடியாக அதிமுக மற்றும் திமுக அரசுகள் கோவில் கணக்கு தணிக்கை பார்க்க ரூ.228 கோடி செலவிடப்பட்டுள்ளது. தனிமனிதர் தவறு செய்தால் தண்டிக்கும்போது அரசு குற்றம் இழைக்கும்போது என்ன செய்வது என்று கேள்வி எழுப்பினர்.

கோவில் பாதுகாப்பு படையினருக்கு இதில் இருந்து ஊதியம் வழங்கப்படவில்லை. காவல் துறையினரையும் முன்னாள் ராணுவத்தினரையும் இணைத்து அறநிலையத்துறையில் இருக்கும் புத்திசாலிகள் திருக்கோவில் பாதுகாப்பு படையை உருவாக்கினர். 1022 உண்டியல் திருட்டுகள், 248 கோவில் விக்ரக திருட்டுகள் நடந்துள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட விக்ரகங்கள் திருட்டுப் போயுள்ளன. இவ்வளவு குற்றங்கள் நடந்தும், கோவில் பாதுகாப்பு படையினருக்கு பல கோடி செலவு செய்தும் இதுவரை எந்த குற்றமும் கண்டுபிடிக்கவில்லை. 2015 முதல் 2018 வரை கோவில் பாதுகாப்பு படையினருக்கு ரூ.172 கோடி செலவு செய்தும் எந்த பலனும் இல்லை. பூஜ்ஜிய அளவிற்கு கூட பிரயோஜனம் இல்லை. எந்தவித பலனும் இல்லாத கோவில் பாதுகாப்பு படையை கலைக்க வேண்டும். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதால் இதை செய்ய வேண்டும் என்றார்.

கோவில் பணத்தை இந்து சமய அறநிலையத்துறை சூறையாடி வருகிறது. உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும். அறமற்ற துறையாக அறநிலையத்துறை உள்ளது. இறைவன் முன்பு தலையை குனிந்து நாணி நிற்க வேண்டும். கோவில் பாதுகாப்பு படையில் தற்போது முன்னாள் காவல்துறையினரை பணியில் சேர்க்கிறார்கள். அவர்கள் மது அருந்தி விட்டு பணியில் ஈடுபடுகின்றனர். திமுக அதிமுக என இரண்டு அரசாங்கமும் சேர்ந்து கோவில் பாதுகாப்பு படையைப் பொறுத்தவரை செயலற்ற நிலையில் உள்ளனர் என்றார்.

Pon Manikavel: இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட வேண்டும் - பொன்.மாணிக்கவேல் ஆவேசம்

சேலம் ஆறகளூரில் உள்ள கோவிலை சென்று பார்த்து வந்தேன். மகதை மண்டலமாக அந்த பகுதி அறியப்படுகிறது. 3-ம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்துள்ளார். 1190-களில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலை அரசு புறக்கணித்து அதன் பழமையை அழித்து நவீனமாக்கி விட்டது. புத்தி குன்றியவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இருந்ததன் விளைவு இப்படி ஆகி விட்டது. அந்த கோவிலை பாதுகாக்கப்பட்ட புராதனக் கோவிலாக மாற்றி அறிவிக்க வேண்டும். ராஜராஜ சோழன் காலத்தில் தமிழகம் முழுவதும் 50 கோவில்களுக்கு மேலாக கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலைத் தவிர மற்ற கோவிலை புராதனக் கோவிலாக அறிவிக்காததற்கு கோவிலில் வருவாய் ஈட்டமுடியாது என்பதே காரணம்.

திருப்பணிக்கு 10 வகையான நிதிகள் உள்ளது திருப்பணிக்கு பொதுமக்களில் வசதியானவர்கள் கொடுக்கிறார்கள். அவர்களிடம் பணம் வாங்கி திருப்பணி செய்துவிட்டு, கோவில் நிதியில் கணக்கு காட்டி விடுகிறார்கள். கோவில் அர்ச்சகர்களை கோவில் ஊழியராக காட்டாமல், அதிகாரிகள் மட்டும் தங்களை கோவில் ஊழியர்களாக காட்டிக் கொள்கிறார்கள். இதனால் மாதத்திற்கு ரூ.700 மட்டுமே அர்ச்சகருக்கு ஊதியமாக கிடைக்கிறது. ஆனால் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கிடைக்கிறது. கணக்கு பார்க்கும் அறநிலையத்துறைக்கு ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. கோவிலை பாதுகாத்து உழைப்பவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை.

அதிகாரத்திற்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூகப் பணிக்கு வரவேண்டும். பொய் வழக்கு போடுவார்கள் என பயப்படுகிறார்கள். அந்த பயம் தேவையில்லை. என் மீது சிபிஐ வழக்குப் போட்டது. அது மண்ணாங்கட்டி விளக்குமாறுக்கு சமமானது. நான் பயப்படவில்லை. 2 ஆயிரம் வழக்குகளை கூட எதிர்கொள்வேன். நான் தவறு செய்யவில்லை. கோவில் பணம் விரயமாவதை அறநிலையத்துறையினர் மறுக்க முடியாது. மூலவருக்கு கிழிந்த துணிகளை போடுவதால் பெருச்சாளி ஓடும் நிலை உள்ளது. அரசுக்கு எதிர்ப்பான தகவலை சொல்ல பயப்படுகிறார்கள். போலீஸ் பொய் வழக்கு போடுவார்கள் என பயப்படுகிறார்கள். பொய் வழக்கை எதிர்கொள்ள ஒரு நிதி உருவாக்கி பேசப் போகிறேன் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
Embed widget