மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... நீர் திறப்பு வினாடிக்கு 8,500 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 694 கன அடியில் இருந்து 831 கன அடியாக உயர்வு.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 748 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 694 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 831 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... நீர் திறப்பு வினாடிக்கு 8,500 கன அடியாக குறைப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 116.10 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 87.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 8,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு... நீர் திறப்பு வினாடிக்கு 8,500 கன அடியாக குறைப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
முதல்வர் ஸ்டாலின் மங்காத்தா கேம் ஸ்டார்ட்..4 பேர் உள்ளே, 2 பேர் வெளியே!
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
Padma Bhushan awards 2025: தமிழ்நாட்டின் தன்னம்பிக்கை நாயகன்! பத்மபூஷண் விருதைப் பெற்றார் நடிகர் அஜித்
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
இபிஎஸ்,ஸ்டாலின் காரசார விவாதம்: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் போலி என்கவுண்டரா? 
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
Padma Awards 2025: 'பத்ம ஸ்ரீ’ விருது பெற்ற அஸ்வின்! விருது விழா ஹைலைட்ஸ்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..ஆனால் 3 நாட்கள்தான்!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
தப்பா புரிஞ்சிகிட்டீங்க! அவர்களின் நோக்கம் இதுதான்! – மீண்டும் விஜய் ஆண்டனி வெளியிட்டப் பதிவு
இ-பட்டா இருக்கு ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க.. மதுரையில் முதிய தம்பதி கண்ணீர்
இ-பட்டா இருக்கு ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க.. மதுரையில் முதிய தம்பதி கண்ணீர்
Embed widget