மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 101 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 170 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 170 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 101 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 101 கன அடியாக சரிவு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 108.92 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 76.88 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவை மற்றும் டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 101 கன அடியாக சரிவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget