Mettur Dam: மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு! ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவு... இன்றைய நிலவரம் இதோ !
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 10,000 கன அடியாக இருந்த அணை டெல்டா நீர்திறப்பு.

சேலம்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து வினாடிக்கு, 10,000 கன அடியாக இருந்த அணை டெல்டா நீர்திறப்பு.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 15,040 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 9,263 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 10,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.02 அடியில் இருந்து, நேற்று காலை 118.99 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 91.86 டிஎம்சியாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 14,000 கனஅடியாக இருந்து நீர்வரத்து, நேற்று காலை 6,500 கனஅடியாக சரிந்தது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதிலும், பரிசல் சவாரியிலும் முன்புபோல் உற்சாகம்கொள்ளவில்லை. ஆனாலும், விடுமுறை நாட்களில் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இருப்பினும், நீர்வரத்து மேலும் குறைந்தால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.நீர்வரத்து குறைந்தாலும், பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளை காவிரி ஆற்றில் குளிக்கும்போதும், பரிசலில் செல்லும்போதும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.





















