மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,226 கன அடியில் இருந்து 5,317 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 12,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 9,206 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 7,226 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,317 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,226 கன அடியில் இருந்து 5,317 கன அடியாக சரிவு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 90.28 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 52.97 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 12,700 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,226 கன அடியில் இருந்து 5,317 கன அடியாக சரிவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay:
TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Breaking News LIVE 11th OCT 2024: தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய த.வெ.க. தலைவர் விஜய்
Breaking News LIVE 11th OCT 2024: தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய த.வெ.க. தலைவர் விஜய்
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Noel Tata : TATA-ன் கிரீடம் யாருக்கு? ரத்தன் டாடாவின் மனசாட்சி! யார் இந்த நோயல் டாடா?Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay:
TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Ayutha Pooja 2024: தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்! பூக்கள், பழங்கள் விற்பனை படுஜோர்!
Breaking News LIVE 11th OCT 2024: தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய த.வெ.க. தலைவர் விஜய்
Breaking News LIVE 11th OCT 2024: தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய த.வெ.க. தலைவர் விஜய்
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Vettaiyan Collection Day 1: வேட்டையன் முதல் நாள் வசூல் வேட்டை - விஜயின் தி கோட்டை மிஞ்சினாரா சூப்பர் ஸ்டார் ரஜினி?
Pigeons Robbery: அடுத்தடுத்து 50 வீடுகளில் கொள்ளை, சிக்கிய கொள்ளையன், புறா மூலம் ரூ.30 லட்சம் திருடியது எப்படி?
Pigeons Robbery: அடுத்தடுத்து 50 வீடுகளில் கொள்ளை, சிக்கிய கொள்ளையன், புறா மூலம் ரூ.30 லட்சம் திருடியது எப்படி?
Rohit Sharma: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - விலகும் கேப்டன் ரோகித் சர்மா, காரணம் என்ன?
Rohit Sharma: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் - விலகும் கேப்டன் ரோகித் சர்மா, காரணம் என்ன?
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து கலக்கும் இளம் பட்டதாரி பெண் விவசாயி!
மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து கலக்கும் இளம் பட்டதாரி பெண் விவசாயி!
Crime: கருக்கலைப்பு மருந்தை உட்கொண்ட +2 மாணவி மரணம் - பெற்றோர் கதறல், காதலன் கைது
Crime: கருக்கலைப்பு மருந்தை உட்கொண்ட +2 மாணவி மரணம் - பெற்றோர் கதறல், காதலன் கைது
Embed widget