மேலும் அறிய

Mettur dam: மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 5,600 கன‌ அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருவதால், அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 9,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 7,600 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,600 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur dam: மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 5,600 கன‌ அடியாக சரிவு

அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 89 வது ஆண்டாக மே 24 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த 11,000 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 5,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur dam: மேட்டூர் அணை நிலவரம்: நீர்வரத்து 5,600 கன‌ அடியாக சரிவு

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 120.4 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 43.55 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,062 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,202 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 52.18 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 12.26 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 511 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Embed widget