மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து....சரிந்ததா..?...உயர்ந்ததா..? - நிலவரம் இதோ

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது, இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6,428 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 3,535 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 3,031 கன அடியாக குறைந்துள்ளது. 

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து....சரிந்ததா..?...உயர்ந்ததா..? - நிலவரம் இதோ

அணையின் நீர் மட்டம் 46.81 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 15.86 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் இருந்தால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 6,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: மேட்டூர் அணையின் இன்றைய நீர்வரத்து....சரிந்ததா..?...உயர்ந்ததா..? - நிலவரம் இதோ

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 100.34 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 23.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,635 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 7,230 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.8 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.62 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,852 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget