மேலும் அறிய

Mettur Dam: ”மீண்டும் சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து” கவலையில் விவசாயிகள்.. என்ன காரணம்..?

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 14,200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 19,199 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 22,601 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 15,530 கன அடியாக குறைந்துள்ளது.

Mettur Dam: ”மீண்டும் சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து” கவலையில் விவசாயிகள்.. என்ன காரணம்..?

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 116.32 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 87.72 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 13,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 14,200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: ”மீண்டும் சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து” கவலையில் விவசாயிகள்.. என்ன காரணம்..?

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்? அடுத்தது என்ன?
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Group 4 Vacancies: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலிப் பணியிடங்களை அதிகரியுங்கள்: ட்ரெண்டாகும் கோரிக்கை!
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
Tupperware Bankruptcy: பேரதிர்ச்சி!  கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
பேரதிர்ச்சி! கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம்.. விரைவில் திவால்? தலைக்கு மேலே போன கடன்
தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!
தகவல் மட்டுமே...இன்னும் வராத உத்தரவு- தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி!
காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டருக்கு சம்போ செந்திலே காரணம் - தாயார் ஆவேச பேட்டி
காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டருக்கு சம்போ செந்திலே காரணம் - தாயார் ஆவேச பேட்டி
Neelakurinji: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி : நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்..
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி : நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்..
Embed widget