மேலும் அறிய
கோவி.செழியன் தலைமையில் தருமபுரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் தலைவர் கோவி.செழியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தருமபுரி மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

தர்மபுரி
தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற மனுக்கள் குழு களஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பல்வேறு துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு 7 இலட்சத்து 91 ஆயிரத்து 580 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் அரசு கொறடா முனைவர் கோ.வி. செழியன் பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் தலைவர் கோவி.செழியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வினை காலை ஒகேனக்கலில் தொடங்கி, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை, வெள்ளாளப்பட்டி ஏரி, சரத்குமார் நதி, இலக்கியம்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் பயணம் செய்து, அருவிகளை கண்டு ரசித்தனர். இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக இருக்கும் பொழுது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால் மெயின் அருவிக்கு செல்கின்ற நடைபாதையை உயரத்தை அதிகரித்து, 35 ஆயிரம் கனஅடி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அருவியினை கண்டு ரசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா தொழிலாளர்கள் சார்பில் பேரவை மனுக்கள் குழுவினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றனர். மேலும், தருமபுரி அடுத்த வெள்ளாளப்பட்டி அருகே கிராம மக்கள் ஒன்றிணைந்து நீரேற்று மூலம் ஏரியை நிரப்பி வருகின்றனர். இந்த ஏரியையும் இந்த சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து சனத்குமார் நதி மற்றும் இலக்கியம்பட்டி ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறுகின்ற பகுதிகளையும், சட்டப்பேரவை மனுக்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குழு தலைவர் மாவட்ட அளவில் பொது மக்கள் 108 மனுக்கள் அளித்துள்ளதாகவும், பல்வேறு மனுக்கள் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளதாகவும், அதில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், மாவட்ட நிர்வாகத்தால் களஆய்வு செய்து முதல்வருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது என்றும், இலவச பட்டா வேண்டி அனுப்பிய மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு பட்டா வழங்பட்டதோடு, பல்வேறு துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு 7 இலட்சத்து 91 ஆயிரத்து 580 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டுள்ளதாக குழுவின் தலைவர் அரசு கொறடா முனைவர் கோ.வி. செழியன் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மதியழகன், கிரி, ராமச்சந்திரன், கோவிந்தசாமி, உள்ளிட்ட குழுவினர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மனுதாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement