மேலும் அறிய
Advertisement
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரால் பரபரப்பு
ரஞ்சன் காரிலிருந்து இறங்கி தன்னுடைய உடைமைகளை எடுத்து பாதுகாப்பாக வெளியேறினார். காரில் தீ மளமளவென என எரிய தொடங்கியது
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரஞ்சன் என்பவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். தொடர்ந்து வியாபாரத்திற்காக பெங்களூர் சென்றுள்ளார். தொடர்ந்து பணி முடிந்து இன்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையத்தில் வந்து கொண்டிருந்தபோது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த நல்லாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரின் இஞ்சினியில் புகை வந்துள்ளது. இதனையறிந்து ரஞ்சன் காரை ஓரமாக நிறுத்தி பார்த்துள்ளார். அப்பொழுது காரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை கண்டு, அருகிலிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ரஞ்சனிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து ரஞ்சன் காரிலிருந்து இறங்கி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியேறினார். பின்னர் காரில் தீ மளமளவென என எரிய தொடங்கியது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காரை தண்ணீர் ஊற்றி அனைக்க முயன்றனர். இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, எரிந்துக் கொண்டிருந்த காரை தண்ணீர் பீச்சிய அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த தருமபுரி பேருந்து நிலையம்
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. தருமபுரி பேருந்து நிலையத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் பேருந்து பயணம் செய்ய தினமும்வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலைய புதுப்பிக்கப்பட்டதால், பேருந்து முழுவதும் தரைத்தளம் குண்டும் குழியுமாக காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த தளத்தை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய 15வது நிதி ஆணையம் குழுவில் இருந்து ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் புதிதாக தார் தளம் அமைக்கும் பணி கடந்த ஞாயிற்று கிழமை முதல் தொடங்கியது.
இதனால் மூன்று நாட்களுக்கு பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் பணி முழுவதும் முடிவு பெற்று 5 நாட்களுக்கு பிறகு இன்று புறநகர் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் 5 நாட்களுக்கு பிறகு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion