மேலும் அறிய

தருமபுரியில் ஒற்றை யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானையை பிடிப்பதற்கு கும்கி யானை வரவழைப்பு.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைவது வழக்கமாக இருந்து‌ வருகிறது. கடந்த சில மாதங்களாக பாலக்கோடு பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, இண்டூர், பாலக்கோடு, சோமனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. வனப்பகுதியை இந்த யானை கூட்டம் வனப்பகுதியை விட்டு கிராமப்புறங்களுக்குள் நுழைந்து விவசாய நிலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டு வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது. ஆனால் நான்கு, ஐந்து மாதங்களாக ஒற்றை யானை வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் மாவட்ட வனத்துறை மூலம் இந்த ஒற்றை யானையை விரட்டுவதற்கு வேட்டை தடுப்பு வன காவலர்களைக் கொண்டு வனப் பகுதிக்குள் விரட்டி அடிப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த யானை வனப் பகுதிக்குள் செல்லவில்லை தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திக் கொண்டே வந்தது.
இந்த ஒற்றை யானையை பிடிப்பதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி விவசாயிகளும், அரசியல் கட்சி அமைப்புகளும்  போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வந்தனர்.

தருமபுரியில் ஒற்றை யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு
 
தொடர்ந்து வனத் துறையினரிடம் சிக்காமல்,விவசாயிகளுக்கும் வனத் துறையினருக்கும் போக்கு காட்டி வரும் யானையை, விரட்ட கும்கி யானையை கொண்டு வர வனத் துறையினர் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து இன்று  கோயமுத்தூர் மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்கின்ற கும்கி யானை, தருமபுரி மாவட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டம் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தற்போது கும்கி யானை கொண்டு வரப்பட்டுள்ளது. 

தருமபுரியில் ஒற்றை யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு
 
தொடர்ந்து யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கும்கி யானையை அழைத்துச் சென்று, ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் 4, 5 மாத காலமாக விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை அழித்து, சேதம் செய்து வந்த ஒற்றை காட்டு யானையை வனப் பகுதியில் விரட்டும் பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டி விடுவோம் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் காட்டு யானையை கண்டவுடன் அதனை துன்புறுத்தாமல், வனத் துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒற்றை யானையை காட்டு பகுதிக்குள் விரட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget