மேலும் அறிய
Advertisement
பாலக்கோடு அருகே வெறி நாய்கள் கடித்து காயமடைந்த 2 சிறுமிகள் உட்பட 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
வெறிநாய் இரண்டு சிறுமிகள் உட்பட எட்டு பேரை கடித்து குதறியது மட்டுமில்லாமல், வீடுகளில் வளர்க்கபடும் ஆடு, மாடுகளையும், குறிப்பாக பால் கறக்க கூடிய கறவை மாடுகளை அடுத்தடுத்து கடித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேவுள்ள பஞ்சப்பள்ளியில் தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றி திரிந்து வருகின்றது. இதில் நேற்றிரவு சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று வரிசையாக கடித்துள்ளது. இதில் பஞ்சப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதவராஜ் என்பவரின் பத்தாம் வகுப்பு படித்து வரும் மகளான நிஷா (15), அருண் என்பவரின் மகளான தாரிகா (8), இதே போல அதே ஊரை சேர்ந்த கோமதி (30), நரசிம்மன் (40), சந்திரசேகரன் (49) உட்பட எட்டு பேர் வெறி நாய்கள் கடித்து குதறியதில் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பஞ்சப்பள்ளி பகுதியில் வெறிநாய் இரண்டு சிறுமிகள் உட்பட எட்டு பேரை கடித்து குதறியது மட்டுமில்லாமல், வீடுகளில் வளர்க்கபடும் ஆடு, மாடுகளையும், குறிப்பாக பால் கறக்க கூடிய கறவை மாடுகளை குறி வைத்து அடுத்தடுத்து கடித்துள்ளது. இதனால் பஞ்சப்பள்ளி பகுதியில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் வெறி நாய்களின் அட்டகாசம் தொடர்வதால், வீடுகளை விட்டு வெளியே நடமாடுவதற்கே அச்சமாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று தெரியவில்லை. பொதுமக்களையும், கால்நடைகளையும் கடித்து குதறி வரும் வெறி நாய்களை கக்டுப்படுத்த பஞ்சப்பள்ளி ஊராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி, விடுதி மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி
75-வது சுதந்திர தின விழா "சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை" முன்னிட்டு தருமபுரி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து நடத்திய மினி மாரத்தான் ஓட்டப் போட்டியை தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டப்போட்டி, தருமபுரி சாலை, செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெசவாளர் காலனி சாலை வழியாக தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றும் வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட, அனைத்து மாணவர்களுக்கு, பிளாஸ்டிக்கை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, சுற்று சூழல் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில், மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்த மினி மாரத்தான் போட்டியில் தருமபுரி விளையாட்டு விடுதி மாணவியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் என 150-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion